இது வேண்டாம்யா.. வேற டியூன் தரேன்.. இளையராஜா மறுத்தும் இயக்குனர் வற்புறுத்தி வாங்கிய பாடல்

by Rohini |
ilaiyaraja
X

கடந்த 50ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் இசையில் பெரிய ஜாம்பவானாக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. ஆரம்பத்தில் கச்சேரிகளில் பாடி வந்த இளையராஜா தன் அண்ணன் பாவலர் மூலமாக சென்னைக்கு வந்தார். அன்னக்கிளி படத்தில்தான் இவருக்கு முதன் முறையாக வாய்ப்பு வந்தது. அதற்கு காரணம் பஞ்சு அருணாச்சலம் தான்.முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் இளையராஜா.

அடிக்கிற கைதான் அணைக்கும் பாடலை யாராலும் மறக்க முடியாது. இது அன்னக்கிளி படத்தில் இளையராஜா போட்ட டியூன் தான். அதுவரை எம்.எஸ்.வி பாடலையே கேட்டு வந்த ரசிகர்களுக்கு இவருடைய டியூன் ஒரு புது உணர்வை ஏற்படுத்தியது. அதிலிருந்து ஒரே ராஜயோகம் தான் இளையராஜாவுக்கு. 70களில் இறுதியில் இருந்து இப்போது வரை இளையராஜாதான் நம்பர் ஒன்.

2 கே கிட்ஸ்களையும் பிடித்துவிட்டார் இளையராஜா. சமீபத்தில்தான் லண்டனில் சிம்பொனி இசையை முடித்துவிட்டு நாடு திரும்பினார். அதனால் திரைப்பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டினார்கள். மரியாதை நிமித்தம் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட இளையராஜா சந்தித்து பேசினார். அப்போது தமிழ் நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்காக ஒரு விழா எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு இளையராஜாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். ஒரு படத்தின் இயக்குனர்தான் இசையமைப்பாளர்களிடம் முதல் முறையில் ஒரு டியூனை வாங்க மாட்டார்கள். வேறு மாதிரி வேண்டும். அப்படி வேண்டும் என மாறி மாறி டியூனை கேட்டு அடம்பிடிப்பார்கள். ஆனால் இளையராஜாவே வேற டியூன் போட்டுத் தருகிறேன் என்று சொல்லியும் வாசு இந்த டியூன் தான் வேண்டும் என அடம்பிடித்து வாங்கினாராம்.


ரிக்கார்டிங் முடிந்து போகும் போது கூட இளையராஜா வாசுவிடம் ‘இப்போ கூட ஒன்னு மில்ல. நான் டியூன் மாற்றி தருகிறேன். இது வேண்டாம்யா’ என சொல்லியிருக்கிறார். ஆனால் வாசு ‘இல்லண்ணே! என்னமோ தெரியல. இது எனக்கு செட் ஆகிவிட்டது. இந்த டியூனே இருக்கட்டும்’ என சொல்லி வாங்கினாராம். அந்த பாடல் ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது’ பாடல் .

Next Story