ஹோட்டலில் காசு வாங்காம சாப்பாடு போட்ட லிங்குசாமி.. சினிமாவில் நுழைஞ்சதே இப்படித்தான்!...

by MURUGAN |   ( Updated:2025-05-10 03:33:34  )
mayilsamy
X

திரையுலகை பொறுத்தவரை சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்தால் சுலபமாக வாய்ப்பை பெற முடியும். அது இல்லை என்றால் வாய்ப்பை தேடி அலைய வேண்டும். இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள். புரடெக்‌ஷன் மேனேஜர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அடிக்கடி போய் பார்த்து வாய்ப்பு கேட்க வேண்டும். அவர்களுடன் நெருக்கமானவர்களுடனும் பழகி வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். வயிற்றுப்பசியை போக்க கூட பணம் இருக்கது. தங்குவதற்கு அறை கூட இருக்காது. அப்படி இருந்தால் வாடகை கொடுக்க பணம் இருக்காது.

அப்படி வாய்ப்பு தேடி அலையும் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்துவிடாது. சிலருக்கு கும்பலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஒரு வசனம் பேசும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த காட்சி ரசிகர்களிடம் பிரபலமானால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கும். இல்லையேல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.


சினிமாவில் காமெடி நடிகராக வேண்டும் என லட்சக்கணக்கான பேர் போராடுவார்கள். ஆனால், எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. எனவே, முன்னணி காமெடி நடிகரிடம் சென்று வாய்ப்பு கேட்டு அவர் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பார்கள். அப்படி சினிமாவில் அலைந்து வாய்ப்பு கிடைத்து மேலே வந்தவர்தான் மறைந்த நடிகர் மயில்சாமி.

இவர் ஒன்றும் முன்னணி காமெடி நடிகர் இல்லை. துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பார். ஆனால், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் கஷ்டப்படும் பலருக்கும் பிரித்து கொடுத்துவிடுவார். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் பலருக்கும் சாப்பாடு போட்டு அவர்களின் பசியை போக்குவார். சரியான வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த பல சின்ன சின்ன காமெடி நடிகர்களுக்கு கடவுள் போல இருந்தவர் மயில்சாமிதான்.

சொந்த ஊரைவிட்டு சினிமா ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு கிடைக்காமல் தி.நகரில் இருந்த ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்தார். அப்போது பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த பாண்டியராஜ் ஒருநாள் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார். அவரும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலேயே இருந்தார்.


அவரிடம் காசு வாங்காத மயில்சாமி ‘நீங்கள் சாப்பிட்ட உணவுக்கான பணத்தை என் சம்பளத்தில் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள். படம் இயக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என கேட்டிருக்கிறார். அந்த நன்றியை மறவாத பாண்டியாஜ் தான் இயக்கிய முதல் படமான கன்னிராசி படத்தில் மயில்சாமிக்கு ஒரு சின்ன வேடம் கொடுத்தார்.

இப்படியெல்லாம் போராடி மேலே வந்த மயில்சாமி இப்போது பல சின்ன சின்ன நடிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Next Story