ப்ளாஷ் பேக்: கால்ஷீட்டில் பிடிவாதமாக இருந்த தயாரிப்பாளர்... பதிலுக்கு விஜயகாந்த் வைத்த டீல்!

by SANKARAN |
vijayakanth
X

தயாரிப்பாளரும் தியேட்டர் ஓனருமான ராம் வாசு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது விஜயகாந்த் தன்னிடம் வைத்த கோரிக்கை பற்றியும், வாஞ்சிநாதன் படம் உருவானது குறித்தும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

தயாரிப்பாளர் காஜாமைதீன் என்னிடம் விஜயகாந்திடம் ஒரு படத்துக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டார். கேப்டன்கிட்ட பேசினேன். சுதீஷ்சும் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்டு. 'சம்பளம் எவ்வளவு?'ன்னு கேட்டாரு. கொடுக்கலாம் பிரதர். டேட் வேணும்னு சொன்னேன். 'மாமா நாளைக்கு வாராங்க. பேசுவோம்'னு சொன்னாரு. மறுநாள் விஜயகாந்தைப் பார்த்து பேசினேன்.

'யார் டைரக்டரு?'ன்னு கேட்டாரு. அது யாருக்குத் தெரியும்? டேட் சொன்னா தானே எந்த டைரக்டரையும் பார்க்க முடியும்னு சொன்னேன். 'நீ போய் முதல்ல டைரக்டரைப் பார்த்துட்டு வா'ன்னு சொன்னாரு. அப்புறம் அது இதுன்னு அப்படியே அந்த பிராசஸ் நின்னு போயிடுச்சு. அப்புறம் ஒரு நாள் செட்ல போய் பார்த்தேன்.

'சார் நீங்க டேட் எதுன்னு சொல்லாதவரைக்கும் எந்த டைரக்டரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க. டேட் சொல்லுங்க. பார்த்துட்டு வர்றேன்'னு சொன்னேன். 'அப்படின்னா நான் சொல்ற டைரக்டரை உன்னால கூட்டி வர முடியுமா?'ன்னு கேட்டாரு. 'சொல்லுங்க சார்'னு சொன்னேன். 'ஷாஜி கைலாஷ்'னு சொன்னாரு.

'நாளைக்கு இங்கே இருப்பாரு சார்'னு சொன்னேன். 'என்னய்யா சொல்றே?'ன்னாரு. 'நாளைக்கு மத்தியானம் உங்களுக்கு எங்கே சார் ஷூட்டிங்?'னு கேட்டேன். 'சிவாஜி கார்டன்'னு சொன்னாரு. 'அங்கே இருப்பார் சார்'னு சொன்னேன்.


ஷாஜிக்கு போன் பண்ணினேன். அவன் உடனே கிளம்பி வந்துட்டான். எனக்கு மம்முட்டி ஷாஜியை நல்ல அறிமுகப்படுத்திருக்காரு. அதை வச்சித்தான் நல்ல பழக்கம். அதுதான் வாஞ்சிநாதன் படம்.

அந்தப் படத்துல பர்ஸ்ட் பிரேம்ல இருந்து கடைசி பிரேம் வரைக்கும் அந்தப் பட தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கு என்ன நடக்குன்னே தெரியாது. பூஜைக்கு வந்தாரு. அப்புறம் ஒரு நாள் சூட்டிங் வந்தாரு. கடைசி வரை நான் முடிச்சிக் கொடுத்தேன். அடுத்து வானத்தைப் போல புராஜெக்ட். லியாகத் அலிகான் ஒரு லைன் சொன்னாரு. ஷாஜி கரெக்டா முடிச்சிக் கொடுத்தாரு. அது கமர்ஷியல் சக்சஸ். அதுல கேப்டனுக்கு அவரைப் பிடிச்சது என்கிறார் ராம் வாசு.

Next Story