தயாரிப்பாளர் கேட்டதும் சம்மதித்த இளையராஜா... ஆனா கவிஞர் என்ன இப்படி இருக்காரு?
தீர்த்தக்கரையினிலே படத்தைத் தயாரித்தவர் பழ.கருப்பையா. மணிவண்ணன் இயக்கினார். இளையராஜா இசை அமைத்துள்ளார். பழ.கருப்பையா தயாரித்த பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அதைத் தாண்டி இருவருக்கும் இடையே நட்பு இருந்தது.
தன்னுடைய நண்பரான எழுத்துச்சித்தர் ஜானுக்கு ஒரு பாட்டைப் படத்தில் தர வேண்டும் என்று விரும்பினார் பழ.கருப்பையா. அவர் அந்த யோசனையை இளையராஜாவிடம் சொன்ன காலகட்டத்தில் பாடல் பிரிவுக்கான நேரம் நெருங்கி வந்ததால் இந்தப் படத்தில் வேணாம். அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என்று இளையராஜா சொல்லி விட்டார்.
அதோடு அதை மறந்துவிட்டார் பழ.கருப்பையா. தீர்த்தக்கரையினிலே படத்தைத் தொடர்ந்து கதையாசிரியர் கலைமணி இயக்கினார். தெற்கத்தி கள்ளன் படத்தை பழ.கருப்பையா தயாரித்தார். அந்தப் படத்தின் பாடல் உருவாக்கத்தின்போது 'வலம்புரி ஜானுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்றீர்களே. நாளைக்கு அவரை வரச் சொல்லுங்க.இந்தப் படத்தில் பயன்படுத்திக்கலாம்' என்றார் இளையராஜா.
மறுநாள் காலையில் வலம்புரி ஜான் வந்தார். இளையராஜா டியூனை வாசித்தார். உடனடியாக அந்த டியூனுக்கு ஒரு பாடல் எழுதிக் கொடுத்தார். இளையராஜா போட்ட டியூனுக்கு அந்தப் பாடல் கனகச்சிதமாகப் பொருந்தியது. அடிக்கடி என்னை வந்து பாருங்க. தொடர்ந்து படங்கள்ல பாட்டு எழுதுறதுக்கான வாய்ப்பைத் தர்றேன்னு ஊக்கப்படுத்தினார் இளையராஜா.
ஆனா வலம்புரி ஜான் அந்தப் பணியைச் செய்யவில்லை. அதை மட்டும் செய்திருந்தால் தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களுக்குப் பாட்டு எழுதக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பார் வலம்புரி ஜான். இதை ஒரு பத்;திரிகைப் பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார் பழ.கருப்பையா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
1987ல் மோகன் நடிப்பில் வெளியான படம் தீர்த்தக்கரையினிலே. மணிவண்ணன் இயக்கியுள்ளார். மோகனுடன் இணைந்து ரூபினி, ஜனகராஜ், செந்தில், மலேசியா வாசுதேவன், வினுசக்கரவர்த்தி, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதம். ஆசை கிளியே நான் சொல்லி, கொட்டி கிடக்குது, தீர்த்தக்கரை ஓரத்திலே, தேய்ச்சு விடப் போறேன், உஷார் அய்யா ஆகிய பாடல்கள் உள்ளன.