உங்க படத்த பார்த்து கொல்லணும்னு நினைச்சேன்!. ரஜினியின் முகத்துக்கு நேராக சொன்ன ராதாரவி...

by Murugan |
உங்க படத்த பார்த்து கொல்லணும்னு நினைச்சேன்!. ரஜினியின் முகத்துக்கு நேராக சொன்ன ராதாரவி...
X

Radharavi: ரஜினியுடன் பல படங்களில் நடித்தவர் ராதாரவி. மறைந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன் இவர். 80களிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார். 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர். விஜயகாந்துடன் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் அசத்தி இருக்கிறார் ராதாரவி. ரஜினியுடன் குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, பணக்காரன், உழைப்பாளி, முத்து, அண்ணாமலை, லிங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் ராதாரவிக்கு நல்ல நட்பு உண்டு.


ரஜினி ராதாரவி நட்பு: ரஜினிக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராதாரவியை அழைத்து அவருடன் பல மணி நேரங்கள் பேசிக்கொண்டிருப்பாராம். இதை ராதாரவியே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ராதாரவி எப்போதும் யாரிடமும் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவரிடம் ஒளிமறைவே இருக்காது.

நாயகன்: ஊடகம் ஒன்றில் பேசிய ராதாராவி. கமலின் நாயகன் படத்தை பார்த்துவிட்டு பிரம்மித்துப்போனேன். வீட்டுக்கு சென்று கேசட்டில் அந்த படத்தை மீண்டும் பார்த்தேன். ரஜினியை சந்தித்தபோது ‘நாயகன்னு ஒரு படம் பார்த்தேன் சார். அழுதுட்டேன்’ என்றேன். ‘அப்படியா.. அப்டியா?’ என அவரின் ஸ்டைலில் ஆச்சர்யப்பட்டார்.


மனிதன்: ‘அடுத்து வேற ஒரு படம் பார்த்தேன் சார். கொல்லணும்னு தோணுச்சி’ என்றேன். ‘என்ன படம்?’ எனகேட்டார். ‘மனிதன்’ என்றேன். ‘இது நான் நடிச்ச படம். ஏன் இப்படி சொல்றீங்க?’ எனக்கேட்டார். ‘நீங்களாம் இந்த மாதிரி படங்களில் நடிக்கக் கூடாது சார். அது என்ன சட்டையில வெடிகுண்டுலாம் வச்சிருக்கீங்க. ஏன் இப்படி ரசிகர்களை ஏமாத்துறீங்க.. உங்களை பாத்து நாலு பேர் அதையே செய்வான். அது என்ன சட்டையில புது டிசைனா?’ எனக்கேட்டேன்’ என ராதாரவி சொல்லியிருக்கிறார்.

நாயகனும், மனிதனும் ஒரே நாளில் வெளிவந்தது. நாயகன் சிறந்தபடமாக இருந்தாலும் வசூல்ரீதியாக பார்த்தால் மனிதனே வெற்றிப்படமாக அமைந்து தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story