செக் போஸ்ட் தாண்டி வந்த கம்முநாட்டி!.. ரஜினியை முகத்துக்கு நேரா திட்டிய ராதாரவி!..

Rajini Radharavi: எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி. அதனாலோ என்னவோ மனதில் தோன்றுவதை தைரியமாக அப்படியே பேசிவிடுவார். அப்படி அவர் பல மேடைகளிலும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படிப்பட்ட பிரபலமாக இருந்தாலும் சகட்டு மேனிக்கு பேசிவிடுவார். அதற்கெல்லாம் வருத்தம் கூட அவர் தெரிவித்தது இல்லை.
ஒருமுறை ‘நயன்தாராவெல்லாம் சீதா வேடத்தில் நடிப்பதுதான் சினிமாவில் கொடுமை’ என பேசினார். இது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோபத்தை ஏற்படுத்த இருவரும் அறிக்கை வெளியிட்டு தங்களின் கோபத்தை காட்டினார்கள். பல மேடைகளில் ரஜினி, கமல், விஷால் ஆகியோர் பற்றி ராதாரவி காட்டமாக பேசியிருக்கிறார்.
இத்தனைக்கும் ரஜினியின் நட்பு வட்டாரத்தில் இருந்தவர் ராதாரவி. ரஜினியின் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். பணக்காரன், உழைப்பாளி, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், அண்ணாமலை, பாண்டியன், லிங்கா, படையப்பா, பாபா, முத்து என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராதாரவியை அழைத்து பேசுவதை ரஜினி ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார். அப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக மதுவும் அருந்துவார்கள் என ராதாரவியே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

யாரைப்பற்றியும் விமர்சிக்க ராதாரவி யோசித்ததே இல்லை. ரஜினி எதாவது கேட்டால் முகத்துக்கு நேராக அப்படியே சொல்லிவிடுவார். அதுவும் அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரங்களில் ராதாரவி பேசிய போதெல்லாம் ரஜினியை விமர்சித்து பேசியிருக்கிறார். அந்தவகையில் ஒரு மேடையில் அவர் பேசிய ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
குரு சிஷ்யன் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ரஜினி என்னிடம் ‘ஏன் ரவி.. நான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால், நீங்கள் எனக்கு ஆதரவாக பேசினால் என்ன பேசுவீர்கள் என கேட்டார். அதற்கு நான் ‘செக் போஸ்ட் தாண்டி வந்த கம்முநாட்டி’ என திட்டுவேன் என சொன்னேன். ‘அது என்ன செக் போஸ்ட் தாண்டி வந்த?’ எனக்கேட்டார். ஆமாம். நீங்கள் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு செக் போஸ்ட் தாண்டிதான தமிழ்நாட்டுக்கு வந்தீங்க’ என சொன்னேன்’ என பேசியிருக்கிறார் ராதாரவி.