கடன் தொல்லையால் தலைமறைவாக இருந்த தேவர் ஃபிலிம்ஸ் குடும்பம்.. ரஜினி சும்மா இருப்பாரா?
சின்னப்பத்தேவர்: 1960 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்தவர் சின்னப்ப தேவர். இவர் அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் விலங்குகளை கொண்டே திரைப்படங்களை எடுத்து அதன் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆரை வைத்து ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்து புகழ் பெற்ற 16 திரைப்படங்கள் பெரும்பாலும் தேவர் பிலிம்ஸ் பேனரில் தான் தயாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தேவர் கோயம்புத்தூரில் இருந்தவர். கோயம்புத்தூரிலேயே தேவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
எம்ஜிஆருடனான நட்பு: சின்னப்பன் தேவர் என்று சொன்னாலே அவருடைய கட்டுமஸ்தான உடம்பு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தன்னுடைய உடம்பை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தவர் தேவர். உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை உண்பது, ஜிம் நிலையம் கூட வைத்திருந்தார் தேவர். அவரை பார்த்துதான் எம்ஜிஆர் தன்னுடைய உடலை பேணி காப்பதில் அக்கறை காட்டினார். அதன் மூலம்தான் இருவருக்குமான பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவருக்கும் இடையே ஒரு ஆழமான நட்பும் இருந்து வந்தது.
தீவிர அரசியலில் எம்ஜிஆர்: எம் ஜி ஆர் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகரான போது பல படங்களில் தேவரை சிபாரிசு செய்து இருக்கிறார். எம்ஜிஆர் தனது சொந்த தயாரிப்பான நாடோடி மன்னனில் பிஸியாக இருந்த போது அந்த சமயத்தில் தேவர் வேறு சில படங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம்ஜிஆர் உடன் பல படங்களில் பணிபுரிந்த போதும் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. அவருக்கு சரியான கதை இல்லை என தேவர் ஒருமுறை குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு எம்ஜிஆர் தீவிர அரசியலில் ஈடுபட புராண கதை கொண்ட திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார்.
கடன் தொல்லை: அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்த்தும் பிரபலமாகி வந்தார். அதனால் ரஜினியை வைத்து படம் தயாரிக்க தேவர் திட்டமிட்டார். தேவர் ஃபிலிம்ஸ் பேனரில் தேவரின் மருமகனான ஆர்ஆர் தியாகராஜன் இயக்கத்தில் தாய் மீது சத்தியம் என்ற படத்தில் ரஜினி நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே தேவர் உடல்நிலை சரியில்லாமல் இரண்டே நாள்களில் இறந்தார். ஆனால் தேவர் மீது அலாதி அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார் ரஜினி. ஒரு கட்டத்திற்குப் பிறகு தேவர் பிலிம்ஸ் நிறுவனம் கடன் தொல்லையில் மூழ்க அதனால் அவருடைய குடும்பமே தலைமறைவாகி விட்டது.
சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வர ஆசை: ஒரு சமயம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணியில் ரஜினி பிஸியானார். திருமண அழைப்பிதழ் திரைக்கதையாசிரியர் கலைஞானத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவர் பிலிம்ஸ் குடும்பம் தலைமறைவானதால் ரஜினியால் திருமண அழைப்பிதழை அந்த குடும்பத்திற்கு கொடுக்க முடியவில்லை. இதை அறிந்த தேவரின் மருமகன் கலைஞானத்திற்கு போன் செய்து அழைப்பிதழ் கொடுத்தாரா என கேட்டாராம். அதற்கு கலைஞானம் எனக்கு கொடுத்துவிட்டார்.
நீங்கள் தலைமறைவாகிவிட்டதால் உங்களுக்கு அவரால் கொடுக்க முடியவில்லை எனக் கூறி இருக்கிறார். ஆனால் தேவரின் மகளும் மருமகனும் ரஜினியின் இல்ல திருமண விழாவிற்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார்கள். உடனே கலைஞானம் நான் கார் அனுப்புகிறேன். நீ திருமணத்திற்கு வந்துவிடு. நேராக ரஜினி போய் நின்று விடு என சொன்னாராம். அதன்படியே தேவரின் மகளும் மருமகனும் ரஜினி இல்ல திருமண விழாவிற்கு சென்றதோடு யாரையும் பார்க்காமல் நேராக ரஜினியின் முன் தோன்றி இருக்கிறார்கள்.
தேவரின் மகளை பார்த்ததும் ரஜினி ஒரு அழுகையாம். ஏனெனில் இவர் முதலில் பார்க்கும் பொழுது தேவரின் மகள் பார்ப்பதற்கே அழகாக இருப்பாராம். ஆனால் அந்த திருமணத்தில் பார்க்கும் பொழுது மிகவும் உடல் மெலிந்து சோர்வுடன் இருப்பதை பார்த்து ரஜினி அழுது விட்டாராம். திருமணம் முடிந்து மறுநாள் தேவரின் மகள் மற்றும் மருமகனை அழைத்து தேவையான உதவிகளை செய்து கொடுத்தாராம் ரஜினி. அதுமட்டுமல்ல தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேருக்கும் தேவையான உதவிகளை செய்து கொண்டு வருகிறாராம் ரஜினி. இந்த தகவலை கலைஞானம் ஒரு மேடையில் கூறினார்.