நெப்போலியன் வில்லனா? நடிக்க தயங்கிய ரஜினி... நடிச்சதும் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?

by Sankaran |
நெப்போலியன் வில்லனா? நடிக்க தயங்கிய ரஜினி... நடிச்சதும் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?
X

எஜமான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நெப்போலியன் நடித்து இருந்தார். வல்லவராயன் என்ற அந்தக் கேரக்டரில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். வானவராயனாக வரும் ரஜினிக்கு சரிசமமான வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் நெப்போலியன்.

முதலில் இந்தப் படத்தில் நடிகர் நெப்போலியனை வில்லனாக நடிக்க வைக்க ரஜினி தயங்கினாராம். அதன்பிறகு எல்லோரும் சொன்னதும் ரஜினி நெப்போலியனை நடிக்க வைக்க சம்மதித்தாராம். படத்தில் நெப்போலியனின் நடிப்பைப் பார்த்ததும் கட்டி அணைத்துப் பாராட்டினாராம். எஜமான் படம் நெப்போலியனுடைய திரை உலக வாழ்வில் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம்.

அதே போல சீவலப்பேரி பாண்டி படமும் அவருக்கு தனி அந்தஸ்தைக் கொடுத்தது. அதே போல தொடர்ந்து வந்த எட்டுப்பட்டி ராசா படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. ரஜினி படத்திலேயே வில்லனாக நடித்துள்ளார் என்றதும் மலையாள உலகில் மாஸான வரவேற்பு நெப்போலியனுக்குக் கிடைத்தது.

ejamaan

தொடர்ந்து அவர் மம்முட்டி, மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அந்த சமயத்தில் ரஜினிகூட நடிச்சதால தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது என்றும் நெப்போலியன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1993ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான படம் எஜமான். ரஜினி, மீனா, நெப்போலியன், கவுண்டமணி, விஜயகுமார், செந்தில், நம்பியார், மனோரமா என பலரும் நடித்து இருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. ஆலப்போல், அடி ராக்குமுத்து, எஜமான் காலடி, இடியே ஆனாலும், நிலவே முகம் காட்டு, ஒருநாளும், தூக்குச்சட்டிய, உரக்கக் கத்துது கோழி ஆகிய பாடல்கள் உள்ளன.

நெப்போலியனின் பிளஸ் பாயிண்டே அவரது உயரம்தான். அது மட்டுமல்லாமல் அவரது தெனாவெட்டான பேச்சு அவரது எல்லாப் படங்களிலும் அவருக்கு என்று ஒரு டிரேடு மார்க்கை உருவாக்கியது. சீவலப்பேரி பாண்டியில் அவர் வைத்த மீசையும், அந்தக் கம்பீரமான நடையும், பேச்சும் நெப்போலியனுக்கு என்று தனி ரசிகர் வட்டத்தையே உருவாக்கிவிட்டது.

Next Story