கமலின் அந்த படத்துக்கு தலைப்பு வைத்த ரஜினி!. அட கமலுக்கே தெரியாதாமே!..
Rajini Kamal: ரஜினி சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்தபோது கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக இருந்தார். ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்திலேயே கமல்தான் ஹீரோ. துவக்கத்தில் கமல் ஹீரோவாக நடித்த படங்களில் அவரின் நண்பராக நடித்து வந்தார் ரஜினி. சில படங்களில் கமலுக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
அதன்பின் கமலும் ரஜினியும் பேசி முடிவு செய்து இருவரும் தனித்தனியாக நடிக்க துவங்கினர். பைரவி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார் ரஜினி. அதன்பின் கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். கமலின் படங்களோடு ரஜினி படங்கள் போட்டி போடும். ஒருகட்டத்தில் வியாபாரத்தில் கமலை தாண்டினார் ரஜினி. இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது.
ரஜினி கமல் நட்பு: கமல் மீது ரஜினிக்கு அதிக மரியாதை உண்டு. திரைத்துறை தொடர்பாக எந்த விஷயமாக இருந்தாலும் ரஜினி ஆலோசிப்பது கமலிடம்தான். இவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இதை பல மேடைகளில் இருவரும் நிரூபித்திருக்கிறார்கள். கமலின் பல படங்களை பலமுறை பார்த்து வியந்து ரசித்து பாராட்டியவர்தான் ரஜினி.
கமலின் ஹேராம்: கமல் எழுதி இயக்கி நடித்த ஹேராம் படத்தை 40 முறை பார்த்தவர் ரஜினி. இதை அவரே சொல்லியிருக்கிறார். இந்நிலையில், கமலின் ஒரு படத்திற்கு தலைப்பு வைத்ததே ரஜினிதான் என்பது பலருக்கும் தெரியாது. ஹேராம் படம் தோல்வி அடைந்தபின்னர் கமலை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
எனவே, ‘என்னை வைத்து நீங்களே ஒரு படம் தயாரியுங்கள்’ என கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டார் கமல். இதை ரஜினியுடம் ரவிக்குமார் சொன்னபோது ‘இன்னும் என்ன யோசிக்கிறீங்க?. உடனே கமலுக்கு அட்வான்ஸ் கொடுங்க’ என சொல்லி நம்பிக்கை கொடுத்தார் ரஜினி. இப்படித்தான் சினிமாவில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பாளராக மாறினார்.
அந்த படத்தின் கதையை கேட்ட ரஜினி ஹீரோ ஒரு கோமாளி. அதேநேரம் அறிவாளி.. அப்படி இருந்தவர் தெனாலி ராமன். எனவே, இந்த படத்திற்கு தெனாலி தலைப்பு பொருத்தமாக இருக்கும். இதை கமலிடம் சொல்லுங்கள். அவருக்கு பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள். நான் சொன்னதாக அவரிடம் சொல்ல வேண்டாம்’ என சொல்லிவிட்டார். இதை ஊடகம் ஒன்றில் கூறிய ரவிக்குமார் ‘படத்தின் வெற்றிவிழாவில் மேடையில்தான் இதை நான் சொன்னேன். அப்போதுதான் இது கமலுக்கே தெரியும்’ என சொல்லியிருக்கிறார்.