கேப்டன் எங்கேயோ போயிட்டாரே! அந்த விஷயத்துல ரஜினி எப்படி இருக்காருன்னு பாருங்க...?

by Sankaran |   ( Updated:2024-12-25 11:00:57  )
vijayakanth rajni
X

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த். திரைத்துறையிலும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களில் இருந்து படப்பிடிப்பில் சமையல் செய்பவர்கள் வரை அத்தனை பேரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் விஜயகாந்த். இவர் படத்தை வாங்கினா நட்டம் வராது. அப்படியே வந்தாலும் நட்டத்தை இவரே சரி பண்ணிடுவாருன்னு படத்தைப் பார்க்காமலேயே விநியோகஸ்தர்கள் வாங்கி ரிலீஸ் பண்ணினார்கள்.

இப்போது ரஜினியின் பக்கம் வருவோம். பாபா படம் தான் தன் கடைசி படம்னு சொல்லி இவரே தயாரித்து ரிலீஸ் பண்ணினார். படம் வெளியாகும் முன் புரொமோஷன் தெறிக்கவிட்டது. படத்துக்கு பிரச்சனையும் வந்தது. அதனால செலவில்லாமல் விளம்பரமும் கிடைத்தது.

மக்களோட ஆர்வத்தைப் பார்த்த ரஜினி விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளார். படம் மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவியது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நட்டமானது. இந்த நட்டத்தை சரிசெய்யும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோர்ட்ல கேஸ் போட்டாங்க.


ரஜினி வீட்டு முன்னாடியும் குவிந்தார்கள். பெரிய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. பெரிய விலைக்கு விற்றதனால ரஜினிக்கு இந்தப் படத்தால நட்டம் இல்லை. பாபா படம்தான் தன்னோட கடைசி படம்னு சொன்ன ரஜினி 3 வருஷம் கழிச்சி சந்திரமுகி படத்தின் மூலமா என்ட்ரி கொடுத்தார். சந்திரமுகி கால்ஷீட் அக்ரீமெண்ட்ல சைன் போடுறதுக்கு முன்னாடி தயாரிப்பாளர்கிட்ட இவர் ஒரு அக்ரீமெண்ட்ல சைன் போடச் சொல்லிருக்காரு.

படம் ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்து அதன்மூலமா நட்டம் எதுவும் ஏற்பட்டால் தயாரிப்பாளர் ஆகிய நீங்கதான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்மூலமா பிரச்சனை ஏதும் வந்தால் நீங்க தான் அதை சரிசெய்யணும். திரையரங்கு உரிமையாளர்களாலோ, விநியோகஸ்தர்களாலோ எந்த ஒரு சிக்கலும் வந்துடக்கூடாது. அதே மாதிரி பேசுனபடி என்னோட சம்பளத்தைக் கொடுத்துடணும்னு அந்த அக்ரீமெண்ட்ல போடப்பட்டு இருந்ததாம்.

அதுக்கு அப்புறம்தான் கால்ஷீட் அக்ரீமெண்ட்ல ரஜினி சைன் போட்டாராம். சந்திரமுகி மட்டுமல்ல. அப்போ ஆரம்பித்து இப்போ நடக்குற கூலி படம் வரை அதே முறை தானாம். தன்னோட படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் போக ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்த்துள்ளார் ரஜினி என்றும் சொல்கிறார்கள்.

அந்த வகையில் தன்னோட முகத்துக்காகத் தானே தயாரிப்பாளர்கள் படம் எடுக்குறாங்க. விநியோகஸ்தர்கள் காசு பார்க்காம வாங்குறாங்க. அப்புறம் அவங்க நஷ்டம் அடைஞ்சா நான் தானே சரிசெய்யணும்னு செய்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story