ரஜினி போட்ட ஆர்டர்! படையப்பா படத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய சிவாஜி...!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி இணைந்து நடித்த படம் படையப்பா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, மணிவண்ணன், லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் 200 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
சம்பளம் எவ்வளவு?: சிவாஜியின் கடைசி படம் இதுதான். இந்தப் படத்தில் தான் இவர் அதிகளவில் சம்பளம் வாங்கினாராம். இந்தப் படத்தில் இடைவேளை வரை மட்டுமே சிவாஜி நடித்து இருந்தார். இந்தப் படத்தின்போது சிவாஜிக்கு சம்பளம் எவ்வளவுன்னு பேசவே இல்லையாம். சிவாஜியும் வழக்கம்போல தயாரிப்பாளரிடம் அது உங்க விருப்பம்னு சொல்லி இருக்கிறார்.
சிவாஜிக்கோ மனதுக்குள் எப்படி போனாலும் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சம்பளமா தருவாங்கன்னு நினைச்சாராம். ஆனா தயாரிப்பாளர் படம் முடிந்ததும் சிவாஜியிடம் சம்பளத்துக்கான செக்கைக் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட அவர் வீட்டிற்குச் சென்று மூத்த மகனிடம் கொடுத்தாராம். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.
ஆனந்த கண்ணீர்: என்னன்னா அதுல ரூ.1கோடின்னு போட்டுருந்தாங்களாம். என்னடா ரூ.10லட்சத்துக்குப் பதிலா ரூ.1கோடின்னு போட்டுட்டாங்களான்னு நினைச்சி தயாரிப்பாளருக்குப் போன் போட்டு கேட்டாராம் சிவாஜி.
அதற்கு இல்லை. நாங்கள் சரியாகத் தான் கொடுத்திருக்கோம். உங்களுக்கு ரூ.1கோடி சம்பளமாகக் கொடுக்கச் சொன்னதே ரஜினிதான்னு சொல்லிருக்காரு. அப்போதே மனதுக்குள் ஆனந்தமான சிவாஜி கண்ணீர் வடித்தாராம். ஏன்னா இதுதான் அவரோட வாழ்நாளிலேயே வாங்கிய பெரிய தொகையாம்!
நன்றி விசுவாசம்: சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த் ஏற்கனவே விடுதலை, படிக்காதவன், நான் வாழ வைப்பேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினிகாந்த் வளர்ந்து வந்த நேரம் அவருக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் கொடுத்தது சிவாஜி தான்.
ஏன்னா ரஜினிகாந்த் நடிச்ச சில சீன்கள் படத்தில் சிவாஜியைக் காட்டிலும் டாப்பாக இருந்தன. ஆனால் அது எவ்வளவு நீளமாக இருந்தாலும் கட் பண்ணாதீங்கன்னு இயக்குனரிடம் சொன்னது சிவாஜிதானாம்! அந்த நன்றி விசுவாசம்தான் ரஜினியை சிவாஜிக்கு இவ்ளோ சம்பளம் கொடுக்க வைத்ததோ என்றே தோன்றுகிறது.