ரஜினியின் நிறைவேறாத ஆசை... அழுதபடி சொன்ன நெகிழ்ச்சியான விஷயம்!

மூன்று முகம் படத்தில் 3 கேரக்டர்ல ஒரு கேரக்டர் போலீஸ் கேரக்டர். பிச்சி உதறிடுப்பாரு. மதுரையில் படத்தின் 125வது நாள் விழா நடந்தது. அதுவரை தென்மாவட்டத்தையே பார்க்காதவர் ரஜினி. கர்நாடகாவில் இருந்து சென்னை வந்து படம் நடிப்பார். போவாரு. அப்படி தான் இருந்தது அவரது வாழ்க்கை.
தென்மாவட்டம்னாலே அவருக்குப் பயம். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம். வந்தக் கூட்டம் ரஜினிக்காகவா, சில்க்கிற்காகவா என அங்கு பேச்சு எழுந்ததாம். ஆனா இருவருக்கும் கூட்டம் சமமா இருந்ததாம். சில்க்கைப் பார்க்குறதுக்கும் அவ்ளோ கூட்டம் வந்ததாம். ரஜினி அந்தக் கூட்டத்தைப் பார்த்துட்டு எங்கோ கர்நாடகாவில பிறந்தோம்.
கண்டக்டரா இருந்தோம். தமிழ்நாடு வந்து நடிகரானோம். வில்லனா வந்து குணச்சித்திர வேடத்துல நடிச்சோம். ஆனா வந்து 7வது வருஷத்துலயே ரசிகர்கள் இந்தளவு உயரத்துக்குக் கொண்டு போய் கொந்தளிக்கிறாங்களேன்னு அந்த மேடையில அழுதபடி பேசினாராம் ரஜினி.
அப்போ ரஜினி ஒரு விஷயம் சொன்னாராம். இந்தப் படத்துல நான் ஒரு போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்கேன். எங்க அப்பா ஒரு நேர்மையான போலீஸ்காரர். அவருக்கு இந்தப் படத்தைப் போட்டுக் காட்டணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறாமப் போயிடுச்சு. அப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா அந்த ஆசை நிறைவேறாமப் போயிடுச்சுன்னு அழுதபடி சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
1982ல் ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினி 3 வேடத்தில் நடித்த படம் மூன்று முகம். ரஜினியுடன் இணைந்து டெல்லி கணேஷ், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், பூர்ணம் விஸ்வநாதன், காஜா ஷெரிப், சத்யராஜ், ராதிகா, சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
தேவாம்பிரதம், ஆசையுள்ள ரோசக்கார, நான் செய்த குறும்பு, எத்தனையோ ஆகிய பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினியின் ஸ்டைல் படுமாஸாக இருக்கும். ரஜினிக்கும், வில்லன் நடிகர் செந்தாமரைக்கும் இடையேயான காட்சிகள் தெறிக்க விட்டன. வில்லன் செந்தாமரை படத்தில் அபாரமாக நடித்திருந்தார்.