சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிஸ் பண்ணிய பிளாக்பஸ்டர் படங்கள்... அட இவ்ளோ இருக்கா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல், கிளாஸ், மாஸ்னு இப்ப வரைக்கும் மெய்ன்டைன் பண்ணிக்கிட்டு வர்றாரு. அவர் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பல படங்களை மிஸ் பண்ணவும் செய்துள்ளார். இதுல பல படங்கள் இயக்குனர் ஷங்கர் இயக்கியவை. என்னென்னன்னு பார்க்கலாமா...
மக்களாட்சி
ஆர்கே. செல்வமணி டைரக்ஷன்ல 1995ல் வெளியான சூப்பர்ஹிட் படம். மம்முட்டி, ரோஜா நடித்தது. இளையராஜா இசை அமைத்துள்ளார். அப்போ ரஜினிக்கு இந்தப் படம் வந்துருக்கு. அவரு பிசியா இருந்ததால அவரால நடிக்க முடியல.
விக்ரம்
1986ல் வெளியான படம். கமல், சத்யராஜ், லிசி, சாருஹாசன் நடித்தார். இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கினார். அவர் முதலில் ரஜினியிடம் சொன்னபோது அவர் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது.
சின்னக்கவுண்டர்
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1992ல் வெளியான மெகா ஹிட் படம். இதுல விஜயகாந்த், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா மியூசிக்ல நல்ல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கு கதையை முதல்ல இயக்குனர் ரஜினிகிட்ட சொன்னாரு. ஆனா என்ன காரணம்னு தெரியல. அவர் மறுக்க, அப்போது பீக்ல இருந்த விஜயகாந்த் நடிச்சாரு.
நாட்டாமை
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், மீனா, குஷ்பூ மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் படம் நாட்டாமை. இது 1994ல் வெளியானது. சிற்பி இசையில் எல்லாமே அருமையான பாடல்கள். இந்தப் படமும் ரஜினிக்கு வந்துருக்கு. ஆனா என்ன காரணத்தாலே அவர் நோ சொல்ல அது சரத்குமாருக்குப் போயிடுச்சு.
ரமணா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2002ல் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படம் ரமணா. இது விஜயகாந்த், சிம்ரன் நடித்து ஹிட் ஆனது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் மாஸ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் ரஜினியிடம் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் 1996ல் வெளியான படம் இந்தியன். கமல், மனிஷா கொய்ராலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் தெறிக்க விட்டன. இந்தப் படத்தின் கதையை முதலில் ஷங்கர் ரஜினியிடம்தான் சொன்னாராம். ஆனா அப்போது ரஜினி பிசியாக படங்கள் பண்ணிக்கொண்டு இருந்ததால் நோ சொல்லிவிட்டாராம்.
முதல்வன்
ஷங்கர் இயக்கத்தில் 1999ல் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படம். இதுல அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கும் முதலில் ரஜினியிடம் தான் கதை சொல்லப்பட்டுள்ளது. அப்போது அவர் பிசியாக இருந்ததால் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
ஜக்குபாய்
கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 2010ல் வெளியான படம் ஜக்குபாய். இதுல சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இதை முதலில் ரஜினியிடம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதன்பிறகு ரஜினி நோ சொன்னது நல்லதுன்னு நினைச்சாரு. ஏன்னா இந்தப் படம் சரியாகப் போகல. இந்தப் படத்துல வந்து ரஜினி தப்பிச்சிட்டாருன்னு சொல்லலாம்.
சாமி
ஹரி இயக்கத்தில 2003ல் வெளியான படம் சாமி. விக்ரம், திரிஷா நடிச்சது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் ரஜினியிடம்தான் ஹரி கதை சொன்னாராம். ஆனால் அப்போது அவர் நோ சொல்லவிட்டாராம்.
அந்நியன்
ஷங்கர் இயக்கத்தில் 2005ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விக்ரம், சதா நடித்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இந்தப் படத்தோட கதையை ஷங்கர் முதலில் ரஜினிகிட்ட தான் சொன்னாராம். அவர் நோ சொல்லி விட்டாராம்.
ஐ
ஷங்கர் இயக்கத்தில் 2015ல் வெளியானது. விக்ரம், எமிஜாக்சன், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தக் கதையும் ரஜினிக்குத்தான் போய் உள்ளது. அவர் நோ சொல்லிவிட்டாராம்.
பாபநாசம்
ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் 2015ல் வெளியான சூப்பர்ஹிட் படம் பாபநாசம். கமல், கௌதமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்தக் கதை முதலில் ரஜினிக்குப் போக அவர் நோ சொல்லிவிட்டாராம்.
துருவ நட்சத்திரம்
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் சொன்னாராம் இயக்குனர். ஆனால் ரஜினி நோ சொல்ல விக்ரம் நடித்து முடித்துவிட்டார். படம் 2 வருஷமாக கிடப்புல கிடக்கு. இன்னும் ரிலீஸ் ஆகலை.