அஜித் படத்தோட ரிலீஸ் ஆகணும்!.. இயக்குனருக்கு பிரஷர் கொடுத்த விஜய்!.. அட அந்த படமா?!...

Vijay Ajith: ரஜினி - கமல் போட்டிக்கு பின் அந்த இடத்தை பிடித்தது அஜித் - விஜய் போட்டிதான். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தார்கள். இவர்களின் பல திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி போட்டி போட்டிருக்கிறது. சில சமயம் அஜித் படமும், சில சமயம் விஜய் படமும் வெற்றி பெற்றிருக்கிறது.
எப்படி ரஜினி - கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டார்களோ அது போலவே இப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். ரஜினி கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டபோது செல்போனும் இல்லை, சமூகவலைத்தளங்களும் இல்லை. ஆனால், இப்போது டிவிட்டரில் அசிங்கமாக ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து திட்டிக்கொள்கிறார்கள்.
அஜித் சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. விஜயோ இதை கண்டுகொள்ளவே இல்லை. அஜித் படம் வெளியானால் 'இது மொக்கை படம்.. பிளாப்' என விஜய் ரசிகர்கள் பதிவிடுவதும், விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் பதிலுக்கு அதையே செய்வதும் என ஓடிகொண்டிருக்கிறது.
போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பொதுவாக பெரிய நடிகர்கள் தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழா நாட்களில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். இயக்குனர்களுக்கும் பிரஷர் கொடுப்பார்கள். ரிலீஸ் தேதியை குறி வைத்து வேகமாக ஒரு படத்தை எடுக்கும்போது படத்தில் தவறு நடந்துவிடும். லோகேஷ் கனகராஜ் லியோவை இயக்கியபோது இதுதான் நடந்தது.
இந்நிலையில், விஜயை வைத்து திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா ஊடகம் ஒன்றில் பேசியபோது ஆதி படத்தின் ரிலீஸ் தேதியில் சந்தித்த பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார். ஆதி படத்தை 2006ம் வருடம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ததாக திட்டமிட்டு வேலை செய்து வந்தோம்.
அஜித்தின் பரமசிவன் திரைப்படம் அதே வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. எனவே, அந்த படத்தோடு ஆதி படமும் வெளியாக வேண்டும். அப்போதுதான் ஹைப் இருக்கும் என விஜயும், அவரின் அபபா எஸ்.ஏ.சியும் கருதி எனக்கு பிரஷர் கொடுத்தார்கள். எனவே, வேகமாக படத்தை எடுத்து ஆதி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தோம். அதனால்தான் அந்த படம் ஓடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.