நாங்கலாம் கஷ்டபட்டு சம்பாதிச்சா.. அவர் மட்டும்!.. இளையராஜாவை சீண்டிய ரஜினி!..

Rajinikanth: திரைப்பட உலகில் எப்போதும் ஒருவரை சார்ந்திருப்பது என்பது தொடர்ந்து இருக்கும். குறிப்பாக 1960 முதல் 80 காலகட்டம் வரை அது அதிகமாகவே இருந்தது. சில கூட்டணிகள் செண்டிமெண்டாகவே பார்க்கப்படும். உதாரணத்திற்கு ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார். அந்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜாதான்.
80களில் படங்களின் வெற்றிக்கு இளையராஜா தேவைப்பட்டார். ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன் போன்ற முக்கிய நடிகர்கள் எல்லோருமே தங்களின் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால்தான் அப்போது பெரிய நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வேறு எந்த புதிய இசையமைப்பாளர்களுக்கும் போகாது.
அதி்லும் ஒரு படம் பற்றி பேசும்போதே இளையராஜாவிடம் முதலில் பேசிவிடுவார்கள். அதன்பின்னர்தான் ஹீரோ யார் என்றே முடிவு செய்வார்கள். அந்த அளவுக்கு இளையராஜா முக்கியமானவராக இருந்தார். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது இளையராஜாவுக்கும் பொருந்தும்.
92ல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். ஒருபக்கம் தேவா வந்தார். அதுபோக வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் வந்தார்கள். எனவே, இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. பெரிய இயக்குனர்கள் இளையராஜாவை கைவிட்டதன் காரணம் இளையராஜாவின் கோபமும், அவர் பேசும் ஸ்டைலும்தான் என பொதுவாக திரையுலகில் சொல்வார்கள்.
ரஜினிக்கு கடைசியாக இளையராஜா இசையமைத்த திரைப்படம் வீரா. இந்த படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. 30 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. பாட்ஷா படத்தில் இளையராஜாவின் சம்பளம் தொடர்பாக ரஜினி பேசியது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்பட்டு முகத்தில் அடித்தது போல் ரஜினியிடம் பேசிவிட்டார். எனவே, அந்த படத்திற்கு தேவா இசையமைத்தார். அந்த படமும், படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க ரஜினி இளையராஜா பக்கம் போவதே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என மாறிவிட்டார்.
இந்நிலையில்தான் ஒரு புதிய தகவல் வெளியே தெரியவந்துள்ளது. தளபதி பட ஆடியோ விழாவில் இளையராஜா 2 நிமிடம் மட்டுமே கலந்துகொண்டார். ‘எனக்கு வேலை இருக்கிறது.. நான் போகிறேன்’ என மைக்கில் பேசிவிட்டு அவர் சென்றுவிட அது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேடையில் பேசிய ரஜினி ‘நாங்களெல்லாம் வெயில், மழையில் நடித்து, சேற்றில், மண்ணில் சண்டை போட்டு உருண்டு சம்பாதித்தால் இளையராஜா ஏசி அறையில் சொகுசாக அமர்ந்துகொண்டு இசையமைத்து சம்பாதிக்கிறார்’ என பேசிவிட்டார். ஆனாலும், அப்போது இளையராஜாவை விட்டால் ஆளில்லை என்பதால் ரஜினி அமைதியாக இருந்தார். பாட்ஷா படத்தில் ராஜாவுடன் மனக்கச்சப்பு ஏற்பட்ட இப்போது வரை இருவரும் இணையவே இல்லை. அதேநேரம், இளையராஜாவை அவ்வப்போது தேடிப்போய் சந்திப்பதை ரஜினி இப்போதும் நிறுத்தவில்லை.