ஷங்கர் கேட்டும் நடிக்க மறுத்த அஜித்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!...

Ajithkumar: இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இவர். இவரை பார்த்துதான் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுப்பதை மற்ற இயக்குனர்களே கற்றுக்கொண்டார்கள்.
ஷங்கரின் இயக்கத்தில் நடிகர்கள்: பல பெரிய நடிகர்களும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட காலம் உண்டு. ரஜினி, கமல், விக்ரம், விஜய் போன்ற நடிகர்களை வைத்து படமெடுத்துள்ள ஷங்கர் அஜித்தை வைத்து மட்டும் படம் எடுக்கவே இல்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஜீன்ஸ் படத்தின் கதையை ஷங்கர் எழுதும்போதே இதில் அஜித் நடிக்க வேண்டும் என ஷங்கர் நினைத்திருக்கிறார். ஆனால், அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டதால் அஜித் அதில் நடிக்கவில்லை.
முதல்வனில் அஜித்: அதேபோல், முதல்வன் கதை தயாரான போதும் அஜித்தை அணுகியிருக்கிறார் ஷங்கர். ஆனால், இதுபோல அரசியல், சமூகம் சார்ந்த கதையில் நடிப்பது எனக்கு செட் ஆகாது. எனக்கு இன்னும் அந்த தகுதி வரவில்லை என சொல்லியிருக்கிறார். சிவாஜி படம் உருவானபோதும் அஜித்தை தொடர்பு கொண்டிருக்கிறார் அஜித். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.
அதிக பட்ஜெட்: ஷங்கர் அதிக செலவு செய்து படமெடுப்பவர். படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு பெரு நஷ்டம் ஏற்படும். இது அஜித்துக்கு பிடிக்காது. தான் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடாது என்பதிலும் அஜித் தெளிவாக இருப்பார். அதனாலேயே ஷங்கரின் படங்களை அவர் தவிர்த்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
கேம் சேஞ்சர் நஷ்டம்: இப்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு தோல்விப்படங்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் அஜித்தை அவர் தொடார்பு கொண்டார் என ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. கேம் சேஞ்சர் படத்தில் அதை தயாரித்த தில் ராஜுவுக்கு 150 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள். இது அஜித்துக்கும் தெரிந்திருக்கும். எனவே, கண்டிப்பாக அவர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டமாட்டார் என்றே சொல்கிறார்கள்.
அதோடு, ஷங்கர் படமென்றால் கண்டிப்பாக புரமோஷனில் கலந்துகொள்ளவேண்டும். ஆனால், அஜித் அதை எப்போதும் செய்யமாட்டார். படம் நன்றாக இருந்தால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்பதுதான் அவரின் கணக்கு. இதனாலாயே ஷங்கர் ஒவ்வொருமுறையும் அஜித்தை அணுகும்போதும் எதையாவது சொல்லி தவிர்த்துவிடுகிறாராம் அஜித்.
எதிர்காலத்தில் ஷங்கரும், அஜித்தும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.