விஜயை விட வயதில் பெரியவரா சங்கீதா?!.. பல வருடங்கள் கழித்து லீக் ஆன தகவல்!...

Sangeetha vijay: நடிகர் விஜயை திருமணம் செய்து கொண்டவர் சங்கீதா. இவர் இலங்கையில் பிறந்தவர். இவரின் அப்பா சொர்ணலிங்கம் பெரும் தொழிலதிபர். ஒருகட்டத்தில் இவரின் குடும்பம் லண்டனில் செட்டில் ஆனது. இப்போதும் லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார். ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்துவிட்டு விஜயின் ரசிகையாக மாறினார் சங்கீதா.
இந்தியா வரும்போது எல்லாம் விஜய் பட ஷூட்டிங் எங்கே இருக்கிறது என தெரிந்துகொண்டு அவரை போய் சந்தித்து பேசியிருக்கிறார். அப்படியே இருவருக்கும் பிடித்துப்போய்விட்டதாக சொல்லப்படுகிறது. ஒருமுறை விஜயை பார்க்க தனது சகோதரியுடன் வீட்டிற்கே போயிருக்கிறார் சங்கீதா.
இந்த தகவலை விஜயின் அம்மா ஷோபாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சங்கீதாவின் குடும்ப பின்னணியை தெரிந்துகொண்டு அவரையே விஜய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் முடிவெடுத்திருக்கிறார்கள். விஜயும் அதற்கு சம்மதம் சொல்ல இவர்களின் திருமணம் 1999ம் வருடம் ஆக்ஸ்டு 25ம் தேதி நடந்தது.
விஜய் தனது மனைவியை கீதா என்றுதான் அழைப்பாராம். விஜய்க்கு மிகவும் பிடித்த டிபன் தோசை என்பதால் அடிக்கடியே அதையே தனது கணவருக்கு செய்து கொடுப்பாராம். சங்கீதாவுக்கு அவரின் அப்பாவை போல பிஸ்னஸ் மைண்ட் என சொல்கிறார்கள். இப்போது கூட லண்டனில் அப்பாவின் தொழிலைத்தான் சங்கீதா கவனித்து வருகிறார்.
சங்கீதா 1972ம் வருடம் பிறந்தவர். விஜய் 1974ம் வருடம் பிறந்தவர். அதாவது விஜயை விட 2 வயது பெரியவர் சங்கீதா. ஆனாலும், இருவருக்கும் இடையே காதல் உருவாகி அது திருமணத்தில் முடிந்திருக்கிறது. முன்பெல்லாம் விஜய் படம் தொடர்பான எல்லா விழாக்களிலும் சங்கீதா கலந்துகொள்வார்.
அதேபோல், விஜய் கலந்துகொள்ள முடியாத நிகழ்ச்சிகளிலும் சங்கீதா கலந்துகொள்வார். அஜித்தின் மனைவி ஷாலினியும், சங்கீதாவும் நல்ல தோழிகள். இப்போது சங்கீதா விஜயை பிரிந்து வாழ்வதாகவே சொல்லப்படுகிறது. விஜய் சென்னை நீலாங்கரையில் தனியாக வசிக்க, சங்கீதா குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.