சசிகுமாரை சர்ப்ரைஸ் பண்ண ரஜினி., பொன்விழா எடுக்கும் நடிகர்னா பின்ன சும்மாவா?

by Rohini |
sasikumar
X

ரஜினி மாஸ்:தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 50 வருடங்களாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதிலும் இன்னமும் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ புதுமுக நடிகர்கள் அடுத்த இளந்தலைமுறை நடிகர்கள் அடுத்தடுத்து வந்தாலும் ரஜினி படங்களுக்கு தான் இன்றுவரை அதிக ஓப்பனிங் இருந்து வருகிறது.

படங்களை பார்த்து விமர்சிக்கும் ரஜினி:வசூலிலும் ரஜினியின் படங்களுக்கு நிகராக எந்த ஒரு படங்களும் இல்லை. அப்படி தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினி திகழ்ந்து வருகிறார். அவருடைய பிஸியான நேரத்திலும் எந்த ஒரு படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வது ரஜினியின் வழக்கம். அதனால் இப்போதுள்ள இயக்குனர்கள் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்யும் போது இந்த படத்தை ரஜினி பார்க்க மாட்டாரா ?பார்த்து என்ன கருத்து சொல்லப் போகிறார் என்றெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரமனுக்கு வாழ்த்து:சில சமயங்களில் அந்தப் படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டால் சம்பந்தப்பட்ட படக்குழுவை தன் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் காலம் காலமாக அதை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அமரன் திரைப்படத்திற்கு அவருடைய மனதார வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்படி சசிகுமார் நடித்த ஒரு படத்தை ரஜினி பார்த்து இப்படி ஒரு கருத்தை சொல்லுவார் என நினைக்கவில்லை என்று சசிகுமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

சசிகுமாரை ஆச்சரியப்படுத்திய ரஜினி:அது வேற எந்த படமும் இல்லை. சுப்பிரமணியபுரம். ரஜினியை முதன் முதலில் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்தில் தான் சசிகுமார் பார்த்திருக்கிறார். அதன் பிறகு ஈரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தித்திருக்கிறார் சசிகுமார். ஈரம் திரைப்படத்தின் ப்ரொடியூசர் ஷங்கர். அதனால் அந்த கேசட்டை ரஜினி வெளியிட அதை சசிகுமார் பெற்றுக்கொண்டாராம்.

அந்த மேடையில் ரஜினியை பார்த்து சசிகுமார் சுப்பிரமணியபுரம் படத்தை பார்த்தீர்களா என கேட்டிருக்கிறார். ஆமாம் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். ஏதார்த்தத்திற்குள் இருக்கும் கமர்சியல் திரைப்படம் என பளீரென சொன்னாராம் ரஜினி. உண்மையிலேயே அந்த படத்தை அப்படிதான் நினைத்து எடுத்தேன். ரஜினியும் அதே மாதிரி சொல்லுவார் என நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.


சரியான வார்த்தையை புடிச்சு அந்த படத்தைப் பற்றி அப்படி சொன்னது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என சசிகுமார் கூறினார். அதன் பிறகு சசிகுமாரும் ரஜினியும் இணைந்து பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு பிறகு தன் வாழ்நாளில் இப்படி ஒரு எதார்த்தமான நடிகரை நான் பார்த்ததே இல்லை என சசிகுமாரை பற்றி ரஜினி ஒரு மேடையில் கூறியிருந்தார்.

Next Story