இனிமே நடிக்க மாட்டேன்.. கோபப்பட்ட கவுண்டமணி!.. சமாதனப்படுத்திய சத்யராஜ்!...

Goundamani: நடிகர் சத்யராஜும், கவுண்டமணியும் இணைந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள் என்பதால் கோவை குசும்பை காட்டுவார்கள். கவுண்டமணி பாஷையில் சொல்ல வேண்டும் எனில் செம லொள்ளு பண்ணுவார்கள். இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே தியேட்டரிம் கூட்டம் கூடும்.
பல திரைப்படங்கள் சத்யராஜ் - கவுண்டமணி காமெடியாலேயே ஓடியிருக்கிறது. நடிகன், மாமன் மகள், வேலை கிடைச்சிடுச்சி, தாய் மாமன், பிரம்மா என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் காமெடிக்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதனால்தான், சத்யராஜ் தான் நடிக்கும் எல்லா படங்களிலும் கவுண்டமணியை தன்னுடன் வைத்துக்கொள்வார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘நான் மற்ற நடிகர்கள் போல அழகு இல்லை. மரத்தை சுற்றி டூயட் பாடுவது எனக்கு செட் ஆகாது. எனவேதான், கவுண்டமணி அண்ணனை என்னுடன் வைத்துக்கொள்வேன். நான் காதலிக்கும்போது அவர் என்னை கலாய்த்துகொண்டே இருப்பார். ரசிகர்களும் நான் காதலிப்பதை ஏற்றுக்கொள்வார்கள். இப்படித்தான் பல படங்களில் நடித்தேன் என சொல்லியிருக்கிறார்.

மேலும், சினிமாவில் கேமரா முன்பு நானும், கவுண்டமணி அண்ணனும் செய்ததை விட கேமராவுக்கு பின்னால் பல காமெடிகள் நடக்கும். கவுண்டமணி அண்ணன் எல்லோரையும் நக்கலடித்து பேசிக்கொண்டே இருப்பார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. சிரிக்காமல் அவருடன் நடிப்பது சிரமம் எனவும் கூறியிருக்கிறார்.
ஒருமுறை சத்யராஜும், கவுண்டமணியும் இணைந்து ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர். சில நாட்கள் நடித்ததும் கவுண்டமணிக்கு கொடுக்கப்பட்ட சம்பள செக் வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது. இதை அவரின் மனைவி போன் செய்து படப்பிடிப்பில் இருந்த கவுண்டமணியிடம் சொல்லிவிட்டார். உடனே இனிமேல் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த கவுண்டமணி மேக்கப்பை எல்லாம் கலைத்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சத்யராஜ் இதுபற்றி விசாரிக்க சம்பள செக் திரும்பி வந்துவிட்டதை சொல்லியிருக்கிறார் கவுண்டமணி. அதற்கு சத்யராஜ் ‘அண்ணே.. நாம ரெண்டு பேரும் ஜாலிய நடிச்சிக்கிட்டு இருக்கோம்னு நம்ம ஊர்ல பேசிக்குறாங்க. வீட்ல போய் சும்மா உட்கார்ந்து என்ன பண்ணப்போறோம்?.. சினிமா எடுக்கலாம் இங்க தயாரிப்பாளரே இல்லை. டைரக்டர் நம்மாள்தான். சம்பளம்லாம் வாங்கி கொடுத்துடுவார். வாங்க நடிப்போம்’ என சொல்லி சமாதானம் செய்து கவுண்டமணி மனதை மாற்றி நடிக்க வைத்தாராம்.