கரகாட்டக்காரன் படத்தோட வெற்றிக்கு என்ன காரணம்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

by Sankaran |   ( Updated:2025-01-01 17:30:24  )
karakattakaran
X

கரகாட்டக்காரன் படம் திரைக்கு வந்து 35 வருஷம் ஆச்சு. இந்தப் படத்தை இதுவரை எதுவும் கிட்டத்துல நெருங்க முடியல. மதுரையில இந்தப் படம் 450 நாள் ஓடிருக்கு. இந்த அளவு இந்தப் படத்தை ரசிக்க என்ன காரணம்?

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். பியு சின்னப்பாவின் மகன் ராஜா பகதூர்தான் வில்லன்.

இந்தப்படம் முதல்ல ஓடுமான்னு யாருமே எதிர்பார்க்கல. வாங்கறதுக்கும் முதல்ல ஆள் இல்ல. அதுக்கு என்ன காரணம்னா கங்கை அமரன் இதுக்கு முன்னாடி இயக்கிய படம் அண்ணனுக்கு ஜே. அது சரியா போகல. இந்தப்படம் இமாலய சாதனையைப் படைச்சது.

இந்தப்படத்தோட பட்ஜெட் 20 லட்சம் ரூபாய்தான். இதுல என்ன விசேஷம்னா பாரம்பரிய இயக்குனர்கள் பண்ணாத சாதனையை கங்கை அமரன் படைச்சிருந்தார். படத்தில் வாழைப்பழ காமெடியை மலையாளப்படத்தில் இருந்து உருவியதாகவும், தில்லானா மோகனாம்பாள் கதை என்றும் பேசப்பட்டது.

ராமராஜனுக்குக் கரகாட்டம்னா என்னன்னு தெரியாது. கனகாவுக்கும் அது தெரியாது. ஆனா படத்துல இருவரும் ஆடுறது கரகாட்டம். அதே மாதிரி தில்லானா மோகனாம்பாளில் பத்மினி அவ்வளவு அழகா பரதம் ஆடியிருப்பாங்க. ஆனால. இதுல அது இல்லன்னாலும் காதல் பிரமாதமா ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

gangai amaran. ramarajan

இந்தப் படத்துல இளையராஜா முழுக்க முழுக்க கரகாட்டத்துக்காக போடப்பட்ட பாடல் மாங்குயிலே, பூங்குயிலே. முந்தி முந்தி விநாயகனே என எல்லாமே சூப்பர். ஊருவிட்டு ஊருவந்து, மாரியம்மா மாரியம்மா பாடல்கள் வேற ரகம். பாட்டாலே புத்தி சொன்னா பாடலை இளையராஜாவே பாடியிருப்பார். அவர் டைட்டில் சாங் பாடினாலே வெற்றிதான்னு சொல்வாங்க. அதே போல நந்தவனத்தில் வந்த ராஜகுமாரின்னு ஒரு சின்ன பாடல் ரொம்பவே சூப்பரா இருக்கும். கார் ரிப்பேர் ஆகும் காமெடிக்கு வரும் மியூசிக் செம மாஸா இருக்கும்.

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, குள்ளமணி, பெரிய கருப்புத்தேவர் காம்போ காமெடி எல்லாம் வேற ரகங்கள். கோவை சரளா, செந்தில் காதலை விரட்டி விடும் வேலையைக் கவுண்டமணி கச்சிதமாக செய்வார். சண்முகசுந்தரத்தின் நடிப்பும் சூப்பராக இருக்கும். அவருக்கு அடையாளமே இந்தப் படம்தான். சந்திரசேகர், சந்தானபாரதியின் நடிப்பும் சூப்பர்.

படத்தில் வரும் வசனங்களும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இந்தப் படத்திற்காக இளையராஜாவிடம் கங்கை அமரன் சென்று சிச்சுவேஷனை மட்டும் சொல்லி பாட்டு வாங்கினாராம். கதையைச் சொல்லவில்லை.

அதிகாரவர்க்கத்தில் உள்ள ஒருவன் கரகாட்டக்காரிக்கு எப்படி இடையூறு கொடுக்கிறான் என்பதையும் சொல்லி இருப்பார்கள். இப்படி எல்லா விஷயங்களும் சரியாக இருந்ததால் தான் இந்தப் படம் ஒன்றரை வருஷம் ஓடி சாதனை படைத்தது. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story