எஸ்.பி.பிக்காக தன்னையே மாற்றிக் கொண்ட நடிகர் திலகம்!. இந்த பாட்டுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..
எஸ்.பி.பி எனும் ஆளுமை: சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் ஒரு ஆளுமைகள் இருப்பார்கள். நடிப்புத்துறையில் அந்த காலம் முதல் இப்போது வரை எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல் இசைத்துறையில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான். அப்படி பாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் முதன்முதலில் எம்ஜிஆருக்காக பாடிய பாடல் என்றால் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அதை போல் சிவாஜிக்காக முதன் முதலில் பாடிய பாடல் ‘பொட்டு வைத்த முகமோ’ என்ற பாடல். இது சுமதி என் சுந்தரி படத்திற்காக பாடியிருந்தார்.
சிவாஜி சொன்ன தைரியம்: அந்தக் காலத்தில் பெரும்பாலும் சிவாஜிக்கு டி.எம். சௌந்தர்ராஜன் தான் பாடல்களை பெரும்பாலும் பாடியிருப்பார். அவர் குரல் எவ்வளவு கம்பீரமாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அதற்காக டி.எம். சௌந்தராஜன் மாதிரி பாடி எஸ்.பி.பி தன்னுடைய தனித்திறமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சிவாஜி எஸ்.பி.பிக்கு தைரியம் சொன்னாராம். உன் குரலிலேயே பாடு. வாய்ஸ் மாற்றி பாட வேண்டாம். உன் குரலுக்கு ஏற்ப நான் என்னுடைய நடிப்பில் மாற்றிக் கொள்கிறேன் என்று தைரியம் சொன்னாராம் சிவாஜி.
டி.எம்.எஸ் சிவாஜி பெஸ்ட்: அதுவரை டி.எம்.எஸ் , சிவாஜி காம்போவையே விரும்பிய மக்களுக்கு ஒரு வித்தியாசமான புது அனுபவத்தை பொட்டு வைத்த முகமோ பாடல் தந்தது. சுமதி என் சுந்தரி படத்திற்காக எஸ்.பி.பியை சிவாஜிக்காக பாட வைத்தது எம்.எஸ்.விஸ்வநாதன்தானாம். அவரது இசையில்தான் பெரும்பாலும் சிவாஜிக்காக டி.எம். எஸ் அதிக பாடல்களை பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய சில பாடல்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. அதில் வாழ்க்கை படத்தில் சிவாஜிக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் அன்பிருக்கும் என்ற பாடல். அது இன்று வரை சிவாஜி ரசிகர்களாலும் எஸ்.பி.பி ரசிகர்களாலும் கொண்டாடப்படக் கூடிய பாடலாகவே அமைந்திருக்கிறது. அதை போல் ஜல்லிக்கட்டு படத்திலும் ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று என்ற பாடல்.
ஆனால் இந்தப் பாடல் எஸ்.பி.பியும் மனோவும் சேர்ந்து பாடியிருந்தார்கள். இதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருக்கிறது. எஸ்.பி.பியை பொறுத்தவரைக்கும் அவர் சுலபமாகத்தான் இந்த சினிமாத்துறையில் வந்துவிட்டார் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. ஆரம்பகாலங்களில் எல்லா கலைஞர்களும் எப்படிப்பட்ட போராட்டத்தை சந்தித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைகிறார்களோ அப்படித்தான் எஸ்.பி.பியும் நுழைந்தார். ஏகப்பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் எல்லாம் கடந்துதான் எஸ்.பி.பி இன்று வரை ஒரு மகத்தான கலைஞனாக திகழ்ந்து வருகிறார்.