என்னது சிவாஜி 'A' படத்துல நடிச்சாரா? அதுவும் அந்த ஒரே படமாம்... அப்படி என்ன ஸ்பெஷல்?

by SANKARAN |
sivajiganesan
X

சிவாஜி கவரிமான்னு ஒரு படத்துல நடித்தார். 6.4.1979ல் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் சிவாஜியின் மற்ற படங்களை விட முற்றிலும் வேறுபட்டது. மற்ற எல்லா படங்களையும் எல்லாரும் பார்க்கலாம். ஆனால் இது மட்டும் A சான்றிதழ் உடைய படமாக உள்ளது. அதாவது 18 வயசுக்கு மேல உள்ளவங்க தான் இந்தப் படத்தைப் பார்க்கணும்.

பஞ்சு அருணாசலம் கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் கவரிமான். சிவாஜி, மேஜர் சுந்தரராஜன், விஜயகுமார், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். சிவாஜி தவறான உறவு அதாவது கள்ளத்தொடர்பு கொண்ட தன் மனைவியை பொண்ணு ஸ்ரீதேவி முன்னாடியே கொன்று விடுகிறார்.

அதனால் ஜெயிலுக்குப் போகிறார். இது அவரது மகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விட அப்பாவை வெறுக்கிறார். இந்த நிலையில் ஜெயிலில் இருந்து திரும்பியதும் தன் மகளைக் கவனித்து வளர்க்கிறார். அவளுக்கு ஒரு காதலன் வந்து விடுகிறான். அவனோ அவளது கற்பை சூறையாட முயல்கிறான். இதை உணர்ந்த சிவாஜியின் மகள் ஸ்ரீதேவி அவனைக் கொன்று விடுகிறாள். அதனால் அந்தக் கொலைப்பழியை சிவாஜி ஏற்றுக் கொள்கிறார். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

A சர்டிபிகேட் படங்கள்னா ரத்தம் தெறிக்கும் காட்சிகள், ஆபாசமாகப் பேசுவது, ஆபாசமான காட்சிகள் இப்படித்தான் இருக்கும். இது கதைக்குத் தேவை. கதையே இப்படித்தான் இருக்கு. இதைக் கற்பனையில் செய்ய முடியாது என்றால் A சான்றிதழ் தான் கொடுப்பாங்க.


கவரிமான் படத்துக்கு ஏன் A சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்ற கேள்வி எழலாம். மற்ற சிவாஜி படங்களை விட இந்தப் படத்தில் பாலியல் பலாத்காரம், வயலென்ஸ் எல்லாம் இருக்கும். சிவாஜியின் வேறு எந்தப் படத்துக்கும் இப்படி A சர்டிபிகேட் கொடுத்தது இல்லை. இந்தப் படத்தைப் பார்த்தாலே தெரியும்.

சென்சார் போர்டு கொடுக்கும் U படங்கள் என்றால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். U/A படங்கள் என்றால் பெரியவர்களின் துணையுடன் குழந்தைகள் பார்க்க வேண்டிய படம். A என்றால் வயது வந்தோருக்கான படம்.

Next Story