சிவக்குமாருக்கு வாழ்வில் மறக்க முடியாத தருணம்! எம்எஸ்வி அப்படி என்ன சொன்னார்?

சிவக்குமார் கோவை கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த நாள்களில் எம்எஸ்வி.யின் மிகத் தீவிரமான ரசிகராக இருந்தவர் சிவக்குமார். தன் வாழ்நாளில் எம்எஸ்வி.யை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்று கூட எம்எஸ்வி. நினைத்தது இல்லை. சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலே எம்எஸ்வி.யை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு சிவக்குமாருக்கு அமைந்தது.
பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்துக்கு எம்எஸ்வி. இசை அமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் உதவியாளராக இருந்தவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்லமுத்து. அவர்தான் சிவக்குமாரை எம்எஸ்வி.யிடம் அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பிலேயே நீண்டகாலம் பழகியது போல கட்டிப் பிடித்து வாழ்த்தினார் எம்எஸ்வி.

சிவக்குமார் மிகச்சிறப்பாக நடித்த படம் மறுபக்கம். இது தேசிய அளவில் தங்கத்தாமரை விருது பெற்றது. லண்டனில் ஒரு நிகழ்ச்சிக்காக போன போது எம்எஸ்வி.க்கு அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக சிவக்குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் 3 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்பிறகு கனடாவில் இருந்து சென்னை திரும்பினார். அங்கு பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் சிவக்குமாரை சந்திக்கும் வாய்ப்பு எம்எஸ்வி.க்கு கிடைத்தது. தம்பி கனடாவில் உங்க படத்தைப் பார்த்தேன். என்னமா நடிச்சிருக்கீங்கன்னு சிவக்குமாரை வாயாரப் பாராட்டினார் எம்எஸ்வி.
எந்த இசை அமைப்பாளரை பார்க்கணும்னு நினைத்தேனோ அவரது வாயாலேயே பாராட்டு பெற்ற அந்தத் தருணம் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று சிவக்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.