ரஜினிக்காக நான் விட்டுக்கொடுக்கல... அப்படி சொல்லவே சொல்லாதீங்க... புலம்பிய நடிகர்!

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் சிவக்குமார் ரஜினியுடன் நடித்த திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஆரம்பத்துல கொடூரமான வில்லனா நடிச்சி ஹீரோவா இந்தளவு உயர்ந்துருக்காருன்னா அது ஒரே ஆளு ரஜினிகாந்த் தான். பதினாறு வயதினிலே படத்துல கொடூரமான வில்லனா ரஜினி நடிச்சிருப்பாரு. கடைசி கிளைமேக்ஸ்ல ஸ்ரீதேவியைக் கெடுப்பாரு. ஆனா அதைக் காட்ட மாட்டாங்க. கமல் டேய் விடுறா விடுறான்னு கத்துவாரு. அதைத்தான் காட்டுவாங்க. ஆனாலும் தலைவா பரட்டைன்னு ஆடியன்ஸ் கத்துறாங்க. அதெல்லாம் ரொம்ப ரேர். அது கடவுளோட கருணைதான்.
'புவனா ஒரு கேள்விக்குறி படத்துல நான் விட்டுக் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. தாயின் கருவறையில் இருக்கும்போதே மண்டையில எல்லாத்தையும் எப்படி வரணும்னு எழுதிடுறான். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரா ஆகணும்னு இருக்கும்போது சிவக்குமார் எப்படி வர முடியும்? பதினாறு வயதினிலே படத்தில் படம் முழுக்க கமல் ஹீரோவா வருவாரு.

கடைசி வரை ரஜினியைத் தடுக்க முடியல. சிவக்குமார் தடுத்துடுவாரா? படத்தோட கதையே என்னன்னா வில்லனைப் போல் தோற்றம் உள்ள நல்லவன். நல்லவன் போல் தோற்றம் உள்ள வில்லன். நான் தான் வில்லனா இருப்பேன். அது ஒர்க் அவுட்டாச்சு. விட்டுக் கொடுத்தேன்னு சொல்லவே சொல்லாதீங்க...' என்கிறார் சிவக்குமார்.
1977ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா. ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படத்தின் கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விழியிலே மலர்ந்தது, ராஜா என்பார் மந்திரி, பூந்தென்றலே நல்ல நேரம் ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்த சிவக்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தது பலரையும் வியக்க வைத்தது.