யாரும் செய்யாத அந்த வேலையை சிம்பிளா முடித்த சிம்பு... எல்லாம் நடிகையின் பெருந்தன்மைதானாம்!

by Sankaran |
str
X

நடிகர் சிம்பு பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இப்போது மீண்டும் சினிமாவில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இவர் தற்போது மணிரத்னம், கமல் காம்போவுடன் இணைந்து தக் லைஃப்; படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து அவருடைய 50வது படத்தையும் சொந்தமாகத் தயாரிக்கப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.

காதல் பிரச்சனை: சிம்புவைப் பற்றி ஒரு காலத்தில் சூட்டிங்குக்கு ஒழுங்காக வர மாட்டார். காதல் பிரச்சனை அப்படி இப்படின்னு பலரும் சொன்னாங்க. அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் இருந்தாலும் இப்போது அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இப்போது மீண்டும் எழுச்சியுடன் வலம் வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி.


மந்திராபேடி: நடிகர் சிம்புவைப் பொருத்தவரை அப்பவே சத்தமில்லாமல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். வாங்க பார்க்கலாம்.தமிழில் மந்திராபேடி நடிச்ச ஒரே படம் சிம்பு நடித்து இயக்கிய மன்மதன். மந்திராபேடியைப் பொருத்தவரை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும் முயற்சி செய்து பார்ப்போமேன்னு மும்பைக்குச் சென்றார் சிம்பு.

மன்மதன் படத்தின் ஆரம்பக்காட்சியை மட்டும்தான் நான் சொன்னேன். ஆனால் அதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார். அவர் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்து இருந்தார். அதுவும் சிக்கலான காட்சி. இருந்தாலும் அதுல நடிக்க முழு ஒத்துழைப்பையும் தந்தார் மந்திராபேடி.

பெருந்தன்மை: அவர் ஒரு பாடல் காட்சியிலும் நடித்தால் நல்லாருக்கும்னு என்னோட விருப்பத்தை அவரிடம் சொன்னேன். உடனே எந்த மறுப்பும் சொல்லாம நடித்து முடித்தார். அந்தப் பாடல் காட்சியில் நடித்ததற்காக கூடுதலாகவும் சம்பளம் வாங்கவில்லை. அந்தப் பெருந்தன்மை இன்றுவரை என் மனதில் நிற்கிறது என்று பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story