அதுல இருந்து முடிவு பண்ணேன்.. குஷ்பூவின் அழுகைக்கு பின் மனமாறிய சுந்தர் சி

by Rohini |
sunarc
X

வெற்றி இயக்குனர்: தற்போது ஒரு வெற்றி இயக்குனராக சுந்தர் சி தமிழ் சினிமாவில் அறியப்பட்டு வருகிறார். தான் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தும் அந்த வெற்றி இயக்குனர் என்ற லிஸ்டில் எப்போதுமே என்னுடைய பெயர் இருந்ததில்லை என சுந்தர் சி வருத்தப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்த நிலைமையே மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த சினிமாவுமே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

தைரியம் வேண்டும்: அதற்கு காரணம் மதகஜராஜா திரைப்படம். 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை துணிந்து இப்போது ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் சுந்தர் சி. எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். இப்போதைய காலகட்டத்தில் இந்தப் படம் வொர்க் அவுட் ஆகுமா ஆகாதா என்று. ஆனால் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்து இன்று வரை மதகஜராஜா படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மீட்டெடுத்தவர் சுந்தர் சி: அதை போல் கடந்த வரும் தமிழ் சினிமாவே தத்தளித்துக் கொண்டிருந்த போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி அந்தப் படத்தின் மூலம் ஓரளவும் சினிமாவை மீட்டெடுத்தவரும் சுந்தர் சிதான். ஆனாலும் ரசிகர்களின் மன நிலை லோகேஷ், நெல்சன், என பெரிய பெரிய இயக்குனர்களின் பக்கம்தான் திரும்புகிறது. ஆனாலும் சுந்தர் சிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சி தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ஒரு சமயம் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்தாராம். அப்போது எடுத்த ஒரு முடிவை பற்றி பேசியிருக்கிறார். இதோ அந்த விவரம்:

டேக்ஸ் பிரச்சினை: ஒரே ஒரு முடிவுதான் எடுத்தேன். நான் விக்கிற கடைசி சொத்து இதுவாகத்தான் இருக்கணும்னு. ஏனெனில் நான் முதன் முதலில் வாங்கிய ஒரு வீட்டை விற்றேன். அதற்கு அன்பே சிவம் படம் ஓடலைனு அர்த்தம் இல்ல. எனக்கு வர வேண்டிய பணம் வரல. நிறைய டேக்ஸ் பிரச்சினை. அதுமட்டுமில்ல பேங்க் அக்கவுண்ட் எல்லாம் சீஸ் பண்ணிட்டாங்க. இப்ப இருக்கிற மாதிரி உலக அறிவுலாம் அப்போ கிடையாது. அப்போ நான் ஈஸியா கடன் வாங்கிருக்கலாம்.


அப்போ ஒரு கோவத்துல இருந்தேன். ரோஷத்துல ஜெயித்துக் காட்டுறேன் பாருனு முதல்ல அந்த இடத்தை வித்துட்டேன். இடத்தை வித்து அப்போ இருக்கிற பிரச்சினையை எல்லாம் தீர்க்கும் போதுதான் எனக்கு தெரியும். அந்த இடத்துல என் மனைவிக்கு இருந்த செண்டிமெண்ட் எந்தளவுக்கு என. அதுவரைக்கும் தெரியாது. நானும் அடிப்படையில் செண்டிமெண்டான ஆளும் கிடையாது. இடத்தை வித்ததும் மனைவி ரொம்ப அழுதாங்க. அது என்னை மிகவும் பாதிச்சது. அதிலிருந்து முடிவு பண்ணேன். இனிமேல் அவங்கள அழ வைக்கக் கூடாதுனு முடிவு பண்ணேன். இப்போ வரைக்கும் என் மனைவி மற்றும் மகள்களை மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன் என சுந்தர் சி கூறினார்.

Next Story