அந்த நடிகையை திருமணம் செய்ய லதாவை பிரிந்து வாழ்ந்த ரஜினி!.. நடந்தது இதுதான்!...

by Sankaran |   ( Updated:2024-12-14 02:53:15  )
rajni balachander
X

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரது எளிமையும், ஸ்டைலும் நடையும் தான் நம் நினைவுக்கு வரும். அவர் இப்போது ஆன்மிகத்திலும் பெரிய அளவில் ஈடுபாட்டுடன் உள்ளார்.

அந்த காலத்தில் அவர் கொஞ்சம் தடம் மாறிப் போனார். அந்த சமயத்தில் அவர் ஒரு முரட்டுக்காளை அல்லவா. அவரை அடக்க ஒரே ஆள் இயக்குனர் சிகரம் பாலசந்தர்தான். அந்த வகையில் சம்பவம் ஒன்று ரஜினியின் வாழ்க்கையில் அரங்கேறியது. என்னன்னு பார்ப்போமா...


ரஜினிக்கு அப்போது 36 வயது. அப்போது நடிகை அமலாவுடன் இணைந்து வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். ரஜினி அப்போது அவரது மனைவி லதாவை விவாகரத்து செய்து விட்டு அமலாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

தொடர்ந்து அமலாவிடம் 'நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு ரஜினி சொன்னாராம்.

ஆனால் அதற்கு அமலா உடன்படவில்லை. அந்த சமயத்தில் ரஜினியும் அவரது மனைவி லதாவை தனியாகக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விடுகிறார். இதை அறிந்ததும் இயக்குனர் பாலசந்தர் ரஜினியைத் திட்டியுள்ளார்.

அது என்னன்னு அவரது மனைவி ராஜம்; பாலசந்தர் இவ்வாறு சொல்கிறார். ரஜினி வீட்டுல இந்தப் பிரச்சனை ஒரே அமர்க்களமா ஆகிடுச்சுன்னு எஸ்.பி.முத்துராமன் சார் தான் சொன்னாரு. அந்த மாதிரி யாருமே திட்டலை.


உங்க வீட்டுக்காரர் தான் திட்டிருக்காருன்னு எஸ்.பி.முத்துராமன் சார் சொன்னாரு. ரஜினியைப் பயங்கரமா கண்டிச்சாராம். 'இந்த மாதிரி என்னை வந்து படங்கள்ல கூப்பிடலனாலும் பரவாயில்லப்பா. நீ செஞ்சது தப்பு. மரியாதையா போய்க்கூட்டிட்டு வா.

யாரை எப்படி வேணாலும் நினைச்சிக்கோ. நீ படங்கள கொடுக்கலன்னாலும் கூட பரவாயில்ல'ன்னு ரொம்ப டேரிங்கா பேசிட்டாரு. முத்துராமன் சார் இன்னும் இருக்காரு. அவரு தான் சொன்னாரு. என்னா பேசுறாரு இவரு. ரஜினியைப் போயி இந்த மாதிரி பேசிட்டாரேன்னு சொன்னாங்க. அந்தமாதிரி ஓபன்னா பேசுறவரு. அவரு சொன்னதும் ரஜினியும் போய்க் கூட்டிட்டு வந்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

87 முதல் 89 வரை ரஜினி தொடர்ந்து அமலாவுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துள்ளார். 87ல் வேலைக்காரன், 88ல் கொடி பறக்குது, 89ல் மாப்பிள்ளை என்று அவருடன் இணைந்து நடித்துள்ளார். இதில் கொடி பறக்குது படத்தைத் தவிர மற்ற இருபடங்களும் சூப்பர்ஹிட்.

Next Story