அந்தப் படத்துல ரஜினியைத் திட்டி நடித்த நடிகை... ரசிகர்கள் என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா?

by Sankaran |   ( Updated:2025-02-04 17:31:12  )
rajnikanth
X

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ரசிகர்கள் தலைவா தலைவா என்று வெறித்தனமாக இருப்பார்கள். அந்த வகையில் தலைவரை யாராவது படத்தில் திட்டினால் சும்மா விடுவார்களா? அதுவும் ஒரு நடிகை அப்படி திட்டி இருக்காங்க. அது யாரு? அதுக்கு அப்புறம் அவங்க என்னென்ன சவால்களை சந்திச்சாங்கன்னு பாருங்க.

அருணாச்சலம்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சுந்தர்.சி. இயக்கிய படம் அருணாச்சலம். 1997ல் இந்தப் படம் வெளியானது. ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார். ரம்பா, மனோரமா, ஜெய்சங்கர் உள்பட பலரும் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை.


இந்தப் படத்தில் நடிகை வடிவுக்கரசி கூன் விழுந்த கொடூரக்காரக் கிழவியாக நடித்திருந்தார். பழைய படங்கள்ல வில்லியாக நடித்துள்ளார். அதே மாதிரி தான் இந்தப் படத்திலும். அனைவருமே பயப்படும் படியாக கொடூரமான வில்லி கேரக்டரில் ஆளே அடையாளம் தெரியாதபடி மிரட்டலாக நடித்துள்ளார்.

அதுதான் அவசியம்: ரஜினியை 'வெளியே போடா அனாதைப் பயலே' என்று எல்லாம் திட்டினார். முதல்ல இந்த மாதிரி நடிக்கத் தயங்கினாராம். அப்புறம் கதைக்கு அதுதான் அவசியம் என்றதும் நடித்துள்ளார். ஆனா அதுக்கு அப்புறம் அவர் ரசிகர்களால என்னென்ன பிரச்சனைகளை சந்திச்சாருன்னு அவரே சொல்றாரு பாருங்க.

பயமாக இருந்தது: ரஜினி சார் கூட அருணாச்சலம் படத்தில் என்னை நடிக்க கேட்டபோது வயசான கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா ரஜினி சாரை திட்டுகிற மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க சொல்றீங்க. அதுதான் பயமாக இருக்கிறது என்று சொன்னேன். நீங்க டயலாக் தான் பேசுறீங்க எல்லாருக்கும் தெரியும். ஒத்துக்கோங்க என்று சொன்னாங்க.

அடிக்க வந்தது..: அதனால போயிட்டு அனாதை பயலே, அந்தப் பயலே... இந்தப் பயலே... என்று நடிச்சு முடிச்சாச்சு. படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ரஜினி சார் பேன்ஸ் கிட்ட இருந்து நான் நிறைய பேஸ் பண்ணினேன். டிரெய்னை நிறுத்துவது அடிக்க வந்து மன்னிப்பு கேட்க வைப்பது போல எல்லாம் நடந்தது.

Next Story