இளையராஜா பண்ற அளவுக்கு டெப்த் உள்ள கதை.. ஜிவி வொர்க் அவுட் ஆவாரா?
வெயில் படம் உருவான கதை: வெயில் படத்துல பசுபதி மற்றும் பரத் இருவரின் காம்போ. ஒரு புதுமையான காம்போ. இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்க ஷங்கர் படத்தை தயாரித்திருந்தார். எப்படியாவது இந்தப் படத்தை வெற்றியடைய வைக்கவேண்டும் என்ற முயற்சியில் படு தீவிரமாக இறங்கினார் வசந்தபாலன். ஒரு இயக்குனருக்கு அதுதானே வேலை. முதலில் முருகேஷன் கேரக்டருக்கு அதாவது பசுபதிக்கு பதில் சூர்யா, அர்ஜூன் என பல பேரை ஷங்கர் யோசித்து வச்சிருந்தாரு.
பசுபதி செட்டாவாரா?: ஆனால் அந்த நேரத்தில்தான் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானது. அதில் ஒரு நகைச்சுவை மிக்க கதாபாத்திரத்தில் பசுபதி நடித்ததை வசந்தபாலன் பார்த்திருக்கிறார். அதனால் வெயில் படத்தில் பசுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என ஷங்கரிடம் கூறினாராம். ஆனால் ஷங்கரோ வில்லத்தனமான முகம். ஆனால் ஹீரோ மாதிரியான சப்ஜெக்ட் வொர்க் அவுட் ஆகுமாயா என கேட்டாராம்.
என்ன மாதிரியான செலக்ஷன்?: வசந்தபாலன் எல்லாம் சரி வரும் சார் என சொல்லி பின் பரத் கேரக்டருக்கு யாரை போடலானு யோசிக்கும் போது அப்போது தான் பருத்திவீரன் படத்தில் கார்த்திக் நடித்திருந்தார். அவரை வைத்து எடுக்கலாமானு யோசிச்சிருக்காங்க. ஆனால் காதல் படம் மிகப்பெரிய ஹிட்டாகி எங்கு பார்த்தாலும் பரத் பேரையேதான் உச்சரித்துக் கொண்டிருந்தார்களாம். இப்படித்தான் பரத்தும் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார்.
மொத்தமே 15 லட்சம்: அதன் பிறகு இசை. படத்தில் இசைக்கான பட்ஜெட் 15 லட்சம் என முதலிலேயே ஃபிக்ஸ் செய்துவிட்டார்களாம். 15 லட்சம் பட்ஜெட்டில் எந்த இசையமைப்பாளரை போடலானு யோசிக்கும் போது யுவன் சங்கர் ராஜா அப்போது மிகவும் பிஸியாக இருந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் கதை எல்லாம் சொல்லி கதை யுவன் சங்கர் ராஜாவுக்கும் பிடித்துப் போக பட்ஜெட்டில் வந்து முட்டியிருக்கிறது.
ஏனெனில் யுவன் அப்போது 35 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். அதனால் யுவனும் படத்தில் ஓரம் கட்டப்பட்டார். பிறகு வசந்தபாலனிடம் ஒரு பி.ஆர்.ஓ வந்து புதிய இசையமைப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? என ஜிவி புகைப்படத்தையும் அவர் போட்ட ஒரு டிராக்கையும் காட்டினாராம். அந்த நேரத்தில் ஜிவியின் பெயர் கோடம்பாக்கத்தில் அதிகளவும் ஒலித்துக் கொண்டிருந்த பெயராகவும் இருந்திருக்கிறது.
ஏனெனில் ஏஆர் ரஹ்மான் ஜீன். அதனால் ஜிவியிடம் ஒரு ஃபோல்க் டிராக் மட்டும் போட்டு காட்டுங்கள் என சொல்லி வசந்தபாலன் கேட்க ஜிவியும் போட்டுக் கொடுத்தாராம். ஆனால் ஷங்கர் ‘யோவ். இது இளையராஜா இசையமைக்கிற அளவுக்கு ஒரு ஆழமான கதை. புதுசுலாம் செட்டாகுமா’ என கேட்க வசந்தபாலன் ‘எல்லாம் ஒரு நம்பிக்கைல இறங்குவோம் சார்.. ஏ ஆர் ரஹ்மானின் இசையும் இந்த பையனிடம் மெல்ல எட்டிப்பார்க்கிறது. அதனால் சரி வரும்’ என சொல்லித்தான் ஜிவியை படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முதல் படத்திலேயே வெயிலோடு விளையாடிங்கிற பாடலை போட்டு அனைவரையும் இன்று வரை ஆச்சரியப்படுத்தி வரும் இசையமைப்பாளராக ஜிவி திகழ்ந்து வருகிறார்.