விஜயகாந்த போட்டோ எடுத்தேன்!. எல்லாம் மாறிடுச்சி!.. நெகிழும் போட்டோகிராபர்!...
Vijayakanth: விஜயகாந்தின் அப்பா மதுரையில் ரைஸ் மில்ஸ் நடத்திகொண்டிருந்தார். வீட்டில் வசதி என்பதால் நல்ல பள்ளியில்தான் விஜயகாந்தை படிக்க வைத்தார். ஆனால், விஜயகாந்தோ பள்ளியில் படிக்கும்போதே நட்பு புடை சூழ எப்போதும் வலம் வருவார். நண்பர்களுடன் ஜாலியாக மதுரை சுற்றுவது, சினிமாவுக்கு செல்வது, ஹோட்டலுக்கு போவது என நேரம் செலவழித்தார்.
ஒருகட்டத்தில் படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் ரைஸ் மில்லை கவனிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே எல்லாம் மாறியது. சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க அவருக்கு சில வருடங்கள் ஆகியது. அதுவரை பல கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை சந்தித்தார்.
வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் சண்டை மட்டுமல்ல, விஜயகாந்த நன்றாகவும் நடிப்பார் என்கிற நம்பிக்கையை இயக்குனர்களுக்கு கொடுத்தது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் விஜயகாந்த் நடித்தாலும் ஒரு ஆக்சன் ஹீரோவாகவே அவர் பார்க்கப்பட்டார். அவருக்கும் சண்டை காட்சிகளில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.
ஒருபக்கம், விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த ஒன்று மற்றவர்களுக்கு உதவுவதுதான். பணமாகவே, உணவாகவோ, வாய்ப்பாகவோ ஏதோ ஒன்றின் மூலம் அவர் பலருக்கும் உதவிகொண்டே வந்தார். அவரால் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் விஜயகாந்த்தால் மேலே வந்த சரத்குமார், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களைத்தான் தெரியும். ஆனால், சின்ன சின்ன கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.
பலரை இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் மாற்றி இருக்கிறார். சில கதாசிரியர்களையும் இயக்குனராக மாற்றியிருக்கிறார். இந்நிலையில் மதுரையில் போட்டோகிராபராக இருக்கும் ஆசை தம்பி என்பவர் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். இவர் மதுரையில் ராசி ஸ்டுடியோ என ஒரு போட்டோ கடை வைத்திருக்கிறார்.
விஜயகாந்துக்கு சினிமா ஆசை வந்ததும் மதுரையில் பல ஸ்டுடியோவிலும் போட்டோ எடுத்தார். ஆனால், அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அதன்பின்னர்தான் என் கடைக்கு வந்தார். நான் எடுத்துக் கொடுத்த சில புகைப்படங்கள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. 41 நாட்களில் 32 போட்டோ எடுத்தோம். அதை வைத்துக்கொண்டுதான் சினிமா வாய்ப்பு தேடினார். பெரிய நடிகராக மாறியதும் ஒரு பேட்டியில் என்னை ஞாபகம் வைத்து என் பெயரை சொன்னார் விஜயகாந்த். அதைப்பார்த்த பலரும் 'விஜயகாந்தையே போட்டோ எடுத்தவர்'னு பல பேர் வந்து என்கிட்ட போட்டோ எடுத்துக்கிட்டாங்க’ என நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.