கமல் கூட அந்த விஷயத்துல தைரியமா நடிச்ச நடிகை... அட அவங்களா?
வடிவுக்கரசி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கான விழாவில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்கியராஜ், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடிவுக்கரசியைப் பொருத்த வரை அவருடைய நடிப்பு எல்லாமே எக்ஸ்ட்ராடினரியா இருக்கும். சிவாஜி, கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அப்ளாஸ் வாங்கியவர். ஸ்பாட்ல கூட டயலாக்கை சொல்வாங்க.
அந்த வகையில் கமலையே ஆச்சரியப்படுத்திய நடிகை தான் வடிவுக்கரசி. அவர் என்ன அப்படி ஆச்சரியப்படுத்தி விட்டாரு. இதுபற்றி நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தான் வடிவுக்கரசியை முதன் முதலாக நாங்க சந்திச்சது. கமல் சாரு கூட நடிக்கணும் இல்லையா. யாரா இருந்தாலும் கொஞ்சம் நர்வஸ் ஆவாங்க. அதனால டைரக்டர் யோவ் அந்தப் பொண்ணுக்கு டயலாக்லாம் கரெக்டா சொல்லிக் கொடுய்யா. கமல் கூட நடிக்கும்போது கொஞ்சம் பார்த்துக்கோன்னாரு.
எனக்குப் பார்க்கும்போது அவங்க அப்படி ஒண்ணும் நர்வஸ் ஆன மாதிரி தெரியல. சாதாரணமாத் தான் இருந்தாங்க. அந்த சீன் நடிக்கும்போது டேக் சொன்னதும் கமல் சார் எக்ஸ்ட்ரா ஏதாவது ஒண்ணு பண்ணுவாரு. டயலாக் எல்லாம் பேசி முடிக்கும்போது கடைசியில பேரை அவரு மாத்தி சொல்லிட்டாரு. சந்திரான்னு அவரு சொன்னதும், சாரி சார் ஐ எம் சித்ரான்னு வடிவுக்கரசி டக்னு சொல்லிட்டாங்க.
அவரு அப்படியே ஷாக் ஆகி சாரின்னு சொல்லிட்டு தேங்க்யுன்னதும் கட்னு டைரக்டர் சொல்லிட்டாரு. எல்லாருமே சிரிச்சிட்டோம். எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்குற வடிவுக்கரசி வேற. எனக்குத் தெரிஞ்ச வடிவுக்கரசி வேற. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1985ல் சிவாஜியுடன் இணைந்து வடிவுக்கரசி நடித்த மாபெரும் வெற்றிப் படம் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வடிவுக்கரசியின் நடிப்பு அசத்தலாக இருக்கும். பொன்னாத்தாளாக வந்து அவர் பேசும் ஒவ்வொரு பழமொழியாக சொல்லிஜாடையாக பேசும் வசனமும் தாய்க்குலங்கள் அனைவரும் பிரமிக்கும் வகையில் இருக்கும்.
சொல்லப்போனால் நடிப்பில் சிவாஜிக்கே டஃப் கொடுத்திருப்பார். படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். அந்த நிலாவத்தான், பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம், ஏ குருவி, ராசாவே உன்ன நம்பி, ஏ கிளியிருக்கு, ஏறாத மலை மேல, நான்தானே அந்தக் குயில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.