உள்ளம் கேட்குமே படத்தின் முதல் டைட்டில் இதுவா? ஏகப்பட்ட புதுமுகங்கள்… நீங்க மிஸ் பண்ணக்கூடாத தகவல்கள்…

Ullam Ketkume: தமிழ் சினிமாவில் சில ஜானர் படங்களுக்கு எல்லா நேரமும் வரவேற்பு இருக்கும். கல்லூரி காலத்தை மையமாக வரும் படங்கள்தான் அது. அப்படி ஒரு படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற உள்ளம் கேட்குமே படத்தில் நீங்க மிஸ் பண்ணவே கூடாத தகவல்கள்.
இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஷாம், அசின், ஆர்யா, பூஜா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்த திரைப்படம் உள்ளம் கேட்குமே. ஆனால் இப்படத்தில் நடிக்கும் போது ஷாம் மற்றும் லைலா இருவர்தான் தமிழ் சினிமாவில் அப்பொழுது தெரிந்த முகங்கள்.
மற்ற மூவரையும் புது முகங்களாக தான் உள்ளே அழைத்து வந்திருக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக லைலா தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இரண்டாவது ஹீரோயின் ஆக தான் அசினை அழைத்து வந்திருக்கின்றனர். அசினுக்கும் இது இரண்டாவது திரைப்படமாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் இப்பொழுது பிரபல முகமாக இருக்கும் ஆர்யாவின் உண்மையான பெயர் ஜம்ஷத். அவர் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை செய்து கொண்டிருந்தார். இயக்குனர் ஜீவாவின் வீடு பக்கத்தில் அடிக்கடி ஆர்யாவை பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
படம் முடிந்த பின்னர் அவருக்கு ஆர்யா என்ற பெயரை கொடுத்ததும் இயக்குனர் ஜீவா தான். அதே நேரத்தில் இன்னொரு ஹீரோயினாக இருந்த பூஜாவையும் ஜீவா தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால் இப்படத்தின் நிதி சிக்கல் காரணமாக படம் பலமுறை தள்ளிப் போனது.
கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகி படம் ரிலீஸாக மூன்று வருடங்கள் எடுத்ததாம். அந்த நேரத்தில் ஆர்யாவுக்கு அறிந்தும், அறியாமலும் ஹிட் கிடைத்தது. அசின் எம்.குமரன், பூஜா ஜேஜே, அட்டகாசம் படங்களில் நடித்து பிரபலங்கள் ஆகிவிட்டனர். அதுபோல இப்படத்தின் முதல் பெயராக இருந்தது பெப்சி தானாம்.
இந்த பெயர் ஏன் என்றால் படத்தின் நண்பர்கள் குழுவான பிரியா, இமான், பூஜா, ஷாம், ஐரின் இவர்களுடைய பெயரின் முதல் எழுத்து. இந்த டைட்டிலுக்காக சுசி கணேசன் வேறு போட்டியில் இருந்தார். ஆனால் ஜீவா முந்திக்கொள்ள அவர் தன்னுடைய கல்லூரி ஸ்டோரிக்கு ஃபைவ் ஸ்டார் என பெயர் மாற்றினார்.
ஜீவா டைட்டிலை தட்டிச்சென்றார். இருந்து, இந்த படத்தோட டைட்டிலை மாற்றி, பெப்ஸி குளிர்சாதன கம்பெனியின் தமிழ்நாடு டேக்லைன் உள்ளம் கேட்குமே மோரில் இருந்து 'உள்ளம் கேட்குமே' என புதிய டைட்டிலை மாற்றினார் என்று கூறப்படுகிறது.