ரெக்கார்டிங் வரைக்கும் போன இளையராஜா... தட்டிப் பறிக்கப்பட்ட முதல் வாய்ப்பு...!

by Sankaran |
ilaiyaraja
X

இன்று இசைஞானி, ராகதேவன், இசைக்கடவுள் என்று வர்ணிக்கப்படுகிற இசை மேதை இளையராஜா. இவரது பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். தமிழ்த்திரை உலகில் இவர் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக வலம் வருபவர். இவரது இசைக்கு பல தலைமுறையினர் அடிமைதான்.

வாலிபக் கவிஞர் வாலி: அந்த வகையில் இவர் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு எத்தகைய அவமானங்களை எல்லாம் சந்தித்தார் என்றால் அதை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. ஆனால் வாலிபக் கவிஞர் வாலி அதில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறார். வாங்க அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.


முதன்முதலா அந்த மியூசிக் டைரக்டருக்கு ஜெமினில வாய்ப்பு கிடைக்கல. உயிர்னு ஒரு படம். அப்போ அந்த மியூசிக் டைரக்டர் பிரதர்ஸோடு மேடைக்கச்சேரி பண்ணுவாங்க. அவங்களைக் கூப்பிட்டு இந்த உயிர் படத்துக்கு மியூசிக் போடணும்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

கோவில் பூஜை: டியூன் எல்லாம் போட்டு எல்லாம் ரெடியா இருந்தாங்க. மறுநாள் படத்துக்கு பூஜை. உடனே சினிமாவுக்காக வந்தோம். நல்ல ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு கருமாரி அம்மன் கோவில்ல போய் பூஜை எல்லாம் பண்ணிட்டு திரும்பி வர்றாரு. மறுநாள் பூஜை ரெக்கார்டிங். திரும்பி வந்த உடனே நீங்க மியூசிக் டைரக்டர் இல்லை.

மிஸ் ஆகிப்போச்சு: 'நீங்களும், உங்க குழுவினரும் எங்களுக்குத் திருப்தி இல்லை'. அப்படின்னு சொல்லி ரமணா ஸ்ரீதர்னு ஒரு புதுப்பையனை இசை அமைப்பாளராகப் போட்டு நாளைக்கு பூஜை ரெக்கார்டிங் வரைக்கும் போய் நிறுத்தப்பட்டார் அந்த இசை அமைப்பாளரான அந்த இளைஞர். அவருக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆகிப்போச்சு. 5 வருஷத்துக்கு அப்புறம் அந்த இளைஞர் பெரிய மியூசிக் டைரக்டராக வலம் வருகிறார். அவர்தான் இளையராஜா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்: 1971ல் முத்துராமன், சரோஜாதேவி நடித்த படம் உயிர். பி.ஆர்.சோமு இயக்கிய இந்தப் படத்தை டிவிஎஸ்.புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ரமணா ஸ்ரீதர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story