50 வருஷமா சாப்பாடே கிடையாது.. திகிலடைய வைத்த பழம்பெரும் நடிகை விஜயகுமாரியின் டயட் பிளான்

விஜயகுமாரி: நடிகையர் திலகம் சாவித்திரி என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவருக்கு அடுத்தபடியாக, இல்லை அவருக்கு நிகராக நடிக்க கூடிய நடிகை என்றால் அது விஜயகுமாரி. 1950 களில் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார் .பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படத்தின் நாயகியாக நடித்தவரும் விஜயகுமாரி தான் .இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படமான கல்யாண பரிசு, ஆரூர் தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் ஆன பெண் என்றால் பெண் ,கே எஸ் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான சாரதா.
பல இயக்குனர்களின் முதல் நாயகி: மல்லியம் ராஜகோபாலனின் முதல் படமான ஜீவநாம்சம் ஆகிய படங்களில் விஜயகுமாரி நடித்திருக்கிறார். வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவர் ஏற்ற நடித்த கண்ணகி கதாபாத்திரம் இன்றளவும் போற்றப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. படம் இல்லை அது ஒரு காவியம் .ஸ்ரீதர் இயக்கத்தில் விஜயகுமாரி நடித்த போலீஸ்காரன் மகள், ஏசி திரிலோக சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு அற்புதமாக அமைந்திருந்தது.
காதல் திருமணம்: பிரபல பழம்பெரும் நடிகரான ss ராஜேந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்ந்தனர் .விஜயகுமாரிக்கு இரவி என்ற ஒரு மகன் இருக்கிறார் .இவர் நடித்த படங்களில் வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு ,அழகர் மலைக்கள்ளன், ஆலயமணி, சாரதா ,குங்குமம், கைதியின் காதலி, காஞ்சித் தலைவன், பச்சை விளக்கு, பார் மகளே ,பூம்புகார் ,காக்கும் கரங்கள் என எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுதான் காரணமா?:இந்த நிலையில் விஜயகுமாரி சமீப காலமாக பேட்டிகளில் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை பற்றி கூறி வருகிறார் .அதில் 50 வருடமாக தன்னுடைய சாப்பாடு உணவு வகைகள் என்னென்ன என்பதை பற்றி கூறியிருக்கிறார் .அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .50 வருஷமாக சாப்பாடே அவர் சாப்பிடுவது கிடையாதாம். தினமும் இரண்டு முட்டை. இதுதான் அவருடைய காலை உணவாம்.
தண்ணீரில் வரமல்லி ,சீரகம் ,மிளகு ,ஜவ்வரிசி கலந்து முதல் நாளில் சூடு பண்ணி வைத்து விடுவாராம். அதை பிளாஸ்கில் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை தான் அவர் தினமும் குடிப்பாராம். மதிய உணவுக்கு முன் ஆப்பிள் மாதுளை. இதை சாப்பிட்ட பிறகு ஒரே ஒரு இட்லி, மீன் குழம்பு ,காய்கறி இதுதான் அவருடைய மதிய உணவுகளாம். மாலை நேரத்தில் டீ, இரண்டு பிஸ்கட். இரவு நேரத்தில் ஒரே ஒரு இட்லி அல்லது தோசை. இப்படித்தான் அவருடைய அன்றாட வாழ்க்கையில் உணவுகளை எடுத்துக்கொண்டு வருகிறாராம் விஜயகுமாரி. 89 வயதாகும் இவர் இன்னமும் அதே பொலிவுடன் தான் இருக்கிறார். அதற்கு காரணம் இந்த உணவு வகைகள் தான் என இவர் கூறுவதில் இருந்து தெரிகிறது.