கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

by Sankaran |   ( Updated:2024-12-26 02:30:43  )
vijayakanth
X

தமிழ்சினிமாவில் 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த். 150க்கு மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர்னு பன்முகத்திறன் கொண்டவர். இவர் தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன்ல நடித்ததில் இருந்து 'கேப்டன்'னு செல்லமாக அழைக்கப்பட்டார். புரட்சிகரமான பல கதாபாத்திரங்களில் நடித்ததால் 'புரட்சிக்கலைஞர்'னு தாணு இவருக்குப் பட்டம் வழங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கும், கலைஞர்களுக்கும் உதவிகளை இவர் வாரி வழங்கியதால் கருப்பு எம்ஜிஆர்னு அழைக்கப்பட்டார். இவர் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன தெரியுமா?

முரட்டுக்காளை

எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் 1980ல் வெளியானது. ரஜினி, ரதி, ஜெய்சங்கர் நடித்த படம். இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்துக்குத் தான் கதை சொல்லப்பட்டது. அப்போது அவர் பிசியாக படங்கள் நடித்ததால நோ சொல்லி விட்டாராம். இந்தப் படத்தில் கேப்டனை வில்லனாக நடிக்க அழைத்ததால் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

புதிய பாதை

பார்த்திபன் இயக்கத்தில் 1989ல் வெளியானது. பார்த்திபன், சீதா நடித்த இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்துக்குத் தான் பார்த்திபன் கதை சொன்னாராம். அவர் இந்தப் படத்தை மறுக்கவே அதுல பார்த்திபனே நடித்தார். படமும் சூப்பர்ஹிட் ஆனது. தேசிய விருது பெற்ற படம்.

இணைந்த கைகள்


என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் 1990ல் வெளியான படம் இணைந்த கைகள். ராம்கி, அருண்பாண்டியன், சிந்து மற்றும் பலர் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படத்தை இயக்குனர் கேப்டனிடம் தான் கொண்டு போனாராம். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் 'நோ' சொல்லிவிட்டாராம். படம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

தளபதி

மணிரத்னம் இயக்கத்தில் 1991ல் வெளியான படம் தளபதி. ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படமானது முதலில் விஜயகாந்திடம் தான் போனதாம். அப்போது அவர் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

மறுமலர்ச்சி

பாரதி இயக்கத்தில் 1998ல் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படம். மம்முட்டி, தேவயானி, மனோரமா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை டைரக்டர் பாரதி கேப்டனிடம் தான் சொன்னாராம். ஆனால் ஏன் மிஸ் பண்ணினார்னு தெரியல.

ஆனந்தம்

லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா உள்பட பலர் நடித்த குடும்பப்பாங்கான படம் ஆனந்தம். எஸ்ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் கேப்டனிடம்தான் லிங்குசாமி கதை சொன்னாராம். அவர் 'நோ' சொல்லிவிட்டாராம்.

ஐயா

ஹரி இயக்கத்தில் 2005ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சரத்குமார், நெப்போலியன், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையும் முதலில் கேப்டனிடம் சொல்ல அவர் நோ சொல்லி மிஸ் பண்ணிவிட்டாராம்.

Next Story