விக்ரம், சூர்யா நடிக்கவிருந்த அமீரின் படம்!.. அட எல்லாமே மாறிப்போச்சே!....

Actor suriya: இயக்குனரும் பாலாவும் அமீரும் மதுரையில் வசிக்கும்போதே நண்பர்கள். ஒன்றாக சென்னை சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள். பாடலாசிரியர் அறிவுமதி மூலம் பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர்த்துவிட்டதே அமீர்தான். அதன்பின் பாலா சேது படத்தை இயக்கியபோது அதில் அமீரும் வேலை செய்தார்.
பாலாவின் சேது: சேது படத்தில் விக்ரம் நடித்ததால் அவருக்கும், அமீருக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. அடுத்து நந்தா படத்தை பாலா இயக்கிய போது அந்த படத்தில் இணை இயக்குனராக அமீரும் வேலை செய்தார். அப்போது அவருக்கு சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. சூர்யாவுக்கு எப்படி நடிக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என எல்லாமே சொல்லி கொடுத்தது அமீர்தான்.
மௌனம் பேசியதே: நந்தா படத்திற்கு பின் ‘மௌனம் பேசியதே’ என்கிற படத்தை அமீர் இயக்குனர். இந்த படத்தின் கதையை எழுதியவுடன் கௌதம் வேடத்தில் விக்ரமையும், கண்ணன் வேடத்தில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்றுதான் அமீர் யோசித்திருக்கிறார். ஆனால், சில காரணங்களால் இதில் விக்ரம் நடிக்கவில்லை.
எனவே, கவுதம் வேடத்தில் சூர்யாவையும், கண்ணன் வேடத்தில் நந்தாவையும் நடிக்க வைத்திருக்கிறார். இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் மௌனம் பேசியதே படம்தான் சூர்யாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்தாலும் அவர் சூர்யாவுக்கு ஜோடி இல்லை.
மௌனம் பேசியதே திரிஷா: திரிஷா நம்மைதான் காதலிக்கிறார் என நினைக்கும் சூர்யா ஒரு கட்டத்தில் அது இன்னொருவர் என தெரிந்து ஏமாந்து போவார். அதன்பின் தன்னை ஒருதலையாக லைலா காதலிப்பதை தெரிந்துகொண்டு அவரின் காதலை சூர்யா ஏற்றுக்கொள்வது போல கதையை அமீர் அமைந்திருந்தார்.
பருத்தி வீரன்: அமீர் பருத்திவீரன் படம் எடுத்த போது அதிலும் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் கார்த்தி இருந்ததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு போனது. இப்போதுவரை கார்த்தி பல படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் அவருக்கு முக்கிய படமாகவே இருக்கிறது.