சசிக்குமாரிடம் விக்ரம் கொடுத்த ஒரு லட்சம்... தயாரிப்பாளரிடம் போய் இப்படியா கேட்கணும்?

by SANKARAN |
vikram, sasikumar
X

விக்ரமுக்கும், பாலாவுக்கும் மிகப்பெரிய உயரத்தைக் கொடுத்த படம் சேது. ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளர் கந்தசாமிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாகி விட்டது. அவர் ரொம்ப வெள்ளந்தியான மனிதர். இந்தப் படத்தை நம்பிக்கையோடு எடுக்க வந்தார். பாலா நல்ல இயக்குனர். அதுல மாற்றுக்கருத்து இல்லை. அவருக்கு தேவையான அளவு சீன் நல்லா வரும் வரை திரும்ப திரும்ப எடுப்பாரு. கந்தசாமி தன் சக்திக்கு மீறி பணத்தைப் போட்டுருக்காரு.

பாலா இந்தப் படத்துக்கு 98 நாள்கள் 98 ஆயிரம் அடி சூட்டிங் பண்ணிருக்காரு. ஆனால் இதுல பாதி நாள் போதும். 45 ஆயிரம் அடி போதும். இந்தப் படத்துக்காக விக்ரம் ஃபுல் எபக்ட் போட்டு நடிக்கிறாரு. உடம்பைக் குறைக்கிறாரு. பைத்தியக்காரன் வேடத்துக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகா நடிக்கிறாரு. பாலாவும் பிரமாதமா எடுத்தாரு.

ஆனால் கந்தசாமி உயிரைக் கொடுத்து பணத்தை எடுத்தாரு. கடைசியா ஒருவழியா படம் ரிலீஸ் ஆச்சு. படம் முதல் நாள் பெரிய அளவில் போகல. ஆனா 3வது நாள் மிகப்பெரிய ஹிட். விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம். தயாரிப்பாளர் கந்தசாமிக்கு நஷ்டம். விக்ரம் வந்து 'பப்ளிசிட்டிக்காக சசிக்குமாருக்கு ஒரு லட்சம் கொடுத்தேன்.


'அந்தப் பணத்தைத் தந்துடுங்கன்ணேன்'னு கந்தசாமிக்கிட்டே கேட்டாரு. அவரும் இப்ப காசு இல்ல. இருந்தா தாரேன்னு சொன்னாராம். உடனே 'அம்மா சிறுக சிறுக சேர்த்து வச்ச சிறுவாட்டுப்பணம்'னு சொன்னாராம் விக்ரம். உடனே கோபத்துல ஒரு பிளாங் செக் கொடுத்தாராம். பணத்தைக் கொடுத்துட்டு செக்கை வாங்கிக்கறேன். இப்பவாவது நம்புங்க தம்பின்னு சொன்னாராம் கந்தசாமி.

சரின்னு வாங்கிடுறாரு விக்ரம். அப்புறம் வேற எதுல இருந்தோ ஒரு லட்சம் வந்ததும் உடனே விக்ரம்கிட்ட கொடுக்குறாரு. அவரும் பிளாங் செக்கைக் கொடுக்குறாரு. அவரு கண் முன்னாலேயே கோபத்துல செக்கைக் கிழிச்சிப் போடுறாரு கந்தசாமி. அப்புறம் அவங்க இருவருக்கும் பேச்சே இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Next Story