விக்ரமனுக்கும், விஜய்க்கும் என்னதான் பிரச்சனை? அதான் உன்னை நினைத்து படத்தில் மிஸ்ஸிங்கா?

உன்னை நினைத்து படத்தில் நடிக்கும்போது நடிகர் விஜய்க்கும், விக்ரமனுக்கும் என்ன பிரச்சனை ஏற்பட்டது? எதனால அந்தப் படத்துல இருந்து விஜய் விலகினாருன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
தேர்வு செய்த விக்ரமன்: விக்ரமனைப் பொருத்தவரைக்கும் தயாரிப்பாளருடைய டிலைட்னுதான் அவரைச் சொல்லணும். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகத்தான் எப்பவுமே தன்னுடைய படங்களில் செயல்படுவார். படத்திற்கு அதிகமாக செலவு வைப்பது அவருக்குப் பிடிக்காது.
கதாநாயகனுடைய உடைகளை எல்லாம்கூட அவர்தான் தேர்வு செய்வார். சினிமாவைப் பொருத்தவரைக்கும் 'பளிச்'சுன்னு உடை இருக்குணுமே தவிர அதற்காக விலை உயர்ந்த உடைகளை எல்லாம் வாங்கணும்கற அவசியமில்லைன்னு நினைக்கிறவர் அவர்.
விஜய்க்கு பிடிக்காத உடைகள்: அந்தவகையில் உன்னை நினைத்துப் படத்தில் விஜய் முதலில் நடித்தபோது அவருக்கான உடைகளை எல்லாம் விக்ரமன் தேர்வு செய்து வைத்திருந்தார். அவர் தேர்வு செய்து வைத்திருந்த உடைகளில் விஜய்க்குக் கொஞ்சம் விருப்பம் இல்லாமல் இருந்தது. அதுலதான் அவங்களோட பிரச்சனை முதலில் ஆரம்பித்தது என்கிறார் சித்ரா லட்சுமணன்.
உன்னை நினைத்து: 2002ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் உன்னை நினைத்து. இந்தப் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றதும் அவருக்குப் பதிலாக சூர்யா நடித்துள்ளார். அவருடன் இணைந்து சினேகா, லைலா, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, பாலு ஆனந்த், தலைவாசல் விஜய், சார்லி, சத்யபிரியா, கோவை செந்தில், சித்ரா லட்சுமணன், பல்லவி, பாண்டு உள்பட பலர் நடித்துள்ளனர்.
பாடல்கள் சூப்பர்: சிற்பியின் இசையில் பாடல்கள் சூப்பர் ரகங்கள். சாக்லேட் சாக்லேட், பொம்பளைங்க காதலத்தா, என்னைத் தாலாட்டும், யார் இந்த தேவதை, சில் சில் சில்லல்லா, ஹேப்பி நியூ இயர் ஆகிய பாடல்கள் உள்ளன.
விக்ரமனின் படங்கள் என்றாலே அது சூப்பர்ஹிட்தான். அதனால் விஜய் கொஞ்சம் அனுசரித்து போயிருந்தால் இந்த நல்ல படத்தை மிஸ் பண்ணி இருக்க வேண்டிய தேவை இருக்காது என்றே சொல்லலாம்.