கமல் காமெடி சூப்பர்தான்... ஆனா அந்த விஷயத்துல ரஜினிதான் கிங்...!

by Sankaran |   ( Updated:2024-12-30 03:31:15  )
rajni kamal
X

நடிகர்திலகம் சிவாஜிக்கு அடுத்த படியாக நடிப்பில் புலின்னா அது கமல்ஹாசனைத் தான் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் கமல் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வேற லெவலில்தான் இருக்கும். எப்படியாவது படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நம்மை ரசிக்க வைத்து விடுவார். நடிப்பில் மட்டும் அல்லாமல் காமெடியிலும் பட்டையைக் கிளப்புவார்.


வசூல்ராஜா, பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, சதிலீலாவதி ஆகிய படங்களில் அவரது காமெடி நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும். அவர் பேசும் வசனங்கள் ஆரம்பத்தில் புரியாதது போல இருந்தாலும் அடுத்த காட்சியில் தான் முந்தைய காட்சியில் என்ன ஜோக் சொன்னார் என்பதே புரிய வரும்.

அதே நேரம் படத்தை 2வது முறை பார்க்கும் போது நமக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றும். மைக்கேல் மதன காமராஜன் படம் முழுக்க காமெடி தான். அந்தக் காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் இது.

அவருடைய நண்பரான ரஜினியை எடுத்துக் கொண்டால் அது வேற ரகத்தில் இருக்கும். காமெடி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்னு சொல்லலாம். வேலைக்காரன் படத்தில் 'நீ என் தாத்தா இல்லை. கிழவா கிழவா...'ன்னு விகே.ராமசாமியை வெறுப்பேற்றுவார்.


அதே போல அந்தப் படத்தில் தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசி நம்மைக் கொல்லென்று சிரிக்க வைத்து விடுவார். குரு சிஷ்யன் படத்தில் 'இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க'ன்னு வினுசக்கரவர்த்தியைக் கலாய்ப்பார்.

அண்ணாமலை படத்தை எடுத்துக் கொண்டால் குஷ்பூவை குளிக்கும்போது அப்படிப் பார்த்ததும் 'கடவுளே, கடவுளே..'ன்னு புலம்பியபடி தன்னை மறந்து வெளியே வருவார். 'முழுசா பார்த்துட்டேன்'னு ஊரெல்லாம் சொல்வார். முத்து படத்தில் இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தரும்னு கெஞ்சலாகக் கேட்பார். படையப்பா படத்தில் செந்திலுக்குப் பெண் பார்க்க வருகையில் மாப்பிள்ளை அவர்தான். ஆனா அவர் போட்டுருக்குற சட்டை என்னதுன்னு கலாய்ப்பார்.

நம்மை போல ஒரு மனிதர் கோபம், காமெடி, சென்டிமென்ட் என உணர்ச்சி வசப்படும்போது ரசிகன் தன்னை மறந்து சிரிக்கிறான். அது யோசிக்காமலே வரவைக்கும் சிரிப்பு. அதனால் அந்த விஷயத்தில் கமலைவிட ரஜினிதான் ஒருபடி மேலாக உயர்ந்து நிற்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Next Story