படுத்துக்கிட்டு கதை கேட்டேன்!.. எனக்கு அப்ப தெரியாது!.. அஸ்வின் மாதிரி யோகி பாபு சிக்கிட்டாரே!...

yogibabu
Yogi Babu: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தவர்தான் யோகிபாபு. உதவி இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையும் இவருக்கு இருந்தது. ஆனால், லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா இவரை நடிகராக்கிவிட்டார். அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்ததால் யோகி பாபு-வாக மாறினார்.
அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நெல்சன் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. கிட்டத்தட்ட அந்த படத்தின் இரண்டாவது ஹீரோவே இவர்தான். ஏனெனில், நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். யோகி பாபுவுக்கு படம் முழுக்க வரும் வேடம்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘கல்யாண வயசுதான்’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் முக்கிய காமெடி நடிகராக மாறினார். ஒருபக்கம் சந்தானம் ஹீரோவாக நடிக்கப்போய்விட, வடிவேலு ஃபீல் அவுட் ஆகிவிட யோகிபாபுவுக்கு ஜாக்பாட் அடித்தது. எல்லா படங்களிலும் யோகிபாபுவே நடித்தார்.

ஒருநாளைக்கு 10 லட்சம் வாங்கும் அளவுக்கெல்லாம் போனார். சில படங்களில் கதையின் நாயகனாக கூட நடித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றுதான் மண்டேலா. மடோனா அஸ்வின் இந்த படத்த இயக்கியிருந்தார். இந்த படத்தின் இயக்குனருக்கும், திரைக்கதைக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது. அதோடு, ஆஸ்கருக்கும் நாமினேட் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய யோகிபாபு ‘மண்டேலா கதையை நான் படுத்துக்கொண்டுதான் கேட்டேன். அஸ்வினிடம் ஒரு தலையணையை கொடுத்து ‘படுத்துக்கிட்டு கதை சொல்லு’ என்றேன். அவன் சொன்ன கதை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. மண்டேலா படத்தில் வருவது முக்கியமான விஷயம். ஏனெனில் ஒரு ஒட்டுக்கு இருக்கும் மதிப்பு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த படம் உங்களை வேற எடுத்துக்கிட்டு போகும் என நெல்சன் சொன்னதையே அஸ்வினும் சொன்னான்.
நானும் நடித்தேன். திடீரென ஒரு நாள் போன் செய்து ‘அண்ணே நம்ம படத்துக்கு தேசிய விருது’ என சொன்னான். சந்தோஷமாக இருந்தது. சில நாட்கள் கழித்து ‘அண்ணே ஆஸ்கருக்கு போயிருக்கு’ என்றான். இந்த மூஞ்சை அவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க. சந்தோஷம்’ என சொன்னேன். அஸ்வினை போல பல திறமையான இளம் இயக்குனர்கள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். சம்பளமெல்லாம் பிரச்சனையே இல்லை. நேரடியாக வந்து என்னிடம் பேசுங்கள்’ என சொல்லியிருக்கிறார் யோகிபாபு.
40 கதைகள் கேட்டுவிட்டு தூங்கிவிட்டேன் என சொன்னதால் ஃபீல்ட் அவுட் ஆனவர் அஸ்வின். யோகிபாபையும் ரசிகர்கள் ட்ரோல் செய்வார்களா என்பது இனிமேல் தெரியவரும்.