ஒரு படத்துக்கு 4 இசையமைப்பாளர்களா? விஜய் நடித்த படத்தின் பாடல்கள் ஹிட்டான ரகசியம் இதுதான்

Actor Vijay: ஒரு படத்திற்கு ஒரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைப்பதே பெரிய விஷயம். இதில் விஜய் நடித்த ஒரு படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கின்றனர் என்ற செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. அதாவது 90கள் காலகட்டத்தில் விஜய் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார்.

அப்போது அவர் நடித்த பல படங்கள் காதல் கதையை மையமாக வைத்தும் செண்டிமெண்ட் படங்களாகவுமே இருந்தன. அப்படி அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் காதலுக்கு மரியாதை. அந்த படத்தை இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு காதலின் ஆழத்தை அந்த படத்தில் அழகாக காட்டி இருப்பார் இயக்குனர் பாசில்.

அந்தப் படத்தில் கதையையும் தாண்டி நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு சேர்த்தது என்றால் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் தான். ஒவ்வொரு பாடல்களுமே ரசிக்கும்படியாகவும் கேட்க கேட்க இனிமையாகவும் இருந்தது. இந்த நிலையில் காதலுக்கு மரியாதை திரைப்படம் 4 மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: அது கெட்ட வார்த்தை கிடையாது அன்பின் வெளிப்பாடு… சமுத்திரக்கனி சொல்றதை பாருங்க..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உருவான படம் தான் காதலுக்கு மரியாதை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நான்கு மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் தான் இசையமைத்திருக்கிறார்கள். தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜா, மலையாளத்தில் ஒரு இசையமைப்பாளர், தெலுங்கில் இசையமைப்பாளர் சிற்பி ,ஹிந்தியில் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

ஆனால் இதில் ஒரு இசையமைப்பாளர் போட்ட பாடல் மற்ற மூன்று மொழிகளிலும் ரிப்பீட்டே ஆனது கிடையாது என சிற்பி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். நான்கு பேருமே ஃபிரஷ்ஷான டியூனை தான் இந்த படத்திற்காக போட்டுக் கொடுத்தோம் என்றும் பெருமையாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய் இடத்தை பிடிக்க சரியான ரூட்டை பிடித்த சிவகார்த்திகேயன்! 2026க்குள் இவர்தான் டாப்

அது மட்டும் அல்லாமல் நான்கு மொழிகளிலும் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது .இதே போல் நாட்டாமை படத்தின் கொட்டா பாக்கு பாடல் தெலுங்கில் ரீமேக்காகும் பொழுது அதே பாட்டையே தெலுங்கிலும் போட்டார்கள். ஆனால் காதலுக்கு மரியாதை படத்தை பொருத்தவரைக்கும் நாங்கள் நான்கு பேருமே ஃபிரஷ்ஷான டியூனை தான் போட்டோம் என கூறினார் சிற்பி.

 

Related Articles

Next Story