கதைக்கு 25000 கேட்டு வெறும் 500தான் கிடைச்சது! கமலின் சூப்பர் ஹிட் படத்துக்கு இவ்வளவுதான் மதிப்பா?

GM Kumar: ஒரு படத்துக்கு கதை சொல்ல போய் அந்த கதைக்கு 25 ஆயிரம் கேட்டு கடைசியில் 500 தான் கொடுத்திருக்கிறார்கள் ஒரு கதை ஆசிரியருக்கு. அந்த சம்பவம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் காக்கி சட்டை. 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கமல் அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திரைப்படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படமாகவும் இது அமைந்தது. இந்த படம் ஹிந்தி மொழியில் குரு என்னும் பெயரில் மிதுன் சக்ரவர்த்தி ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. படத்திற்கு இசை இளையராஜா. படத்தில் அமைந்த அதனை பாடல்களுமே சூப்பர் சூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: ராமராஜனுக்கும் ராதாரவிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே..!

இந்த நிலையில் கதை ஆசிரியரும் நடிகருமான ஜி எம் குமார் இந்த படத்திற்கான கதை எப்படி ஆரம்பமானது என்பதை பற்றி ஒரு தகவலை கூறுகிறார். ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது திடீரென டிரைவர் ஒருவர் வந்து இவர்களிடம் ஒரு தெலுங்கு கம்பெனி கதை கேட்டுக் கொண்டிருக்கிறது. உங்களிடம் கதை எதுவும் இருக்கிறதா என கேட்டிருக்கிறார்.

அப்போதைக்கு இவர்களிடம் பணமும் இல்லையாம், கதையும் இல்லையாம். இருந்தாலும் கதை இருக்கிறது என பொய் சொல்லி அந்த டிரைவரோடு சென்று இருக்கிறார் .அங்கு ஒரு அலுவலகத்தில் இவர்கள் இருவரும் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் .கதை இல்லாமல் எப்படி கதை சொல்வது என யோசித்துக் கொண்டிருக்க திடீரென லிவிங்ஸ்டன் அந்த நேரத்தில் வெளியான செய்தித்தாளில் வெளிவந்த ஒரு செய்தியை பற்றி கூறுகிறார்.

இதையும் படிங்க: ஒரே இசைக்கருவியை வைத்து இளையராஜா பாடிய பாடல்… வைரமுத்துவுக்கு இதெல்லாம் தேவையா இப்படி பாடிட்டாரே…?

அதாவது பொய் சர்டிஃபிக்கேட் கொடுத்து பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்ததாக பாலுமகேந்திராவை போலீஸ் கைது செய்தது என ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு மீண்டும் அதே பத்திரிக்கையில் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது ஒரே பத்திரிக்கையில் அவரைப் பற்றி புகழ்ந்தும் அவரைப்பற்றி இகழ்ந்தும் பேசியதைப் பற்றி லிவிங்ஸ்டன் ஜி எம் குமாரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தாராம்.

இந்த ஒரு விஷயம் ஜி எம் குமாருக்கு ஒரு ஸ்பார்க்கை ஏற்படுத்த அதிலிருந்து ஒரு 2 மணி நேரம் தனியாக உட்கார்ந்து கதையை எழுதினாராம். எழுதி முடித்துவிட்டு அந்த கம்பெனியிடம் கொடுக்க லிவிங்ஸ்டன் இந்த கதைக்கு 25 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த கம்பெனி முடியாது என சொல்லி இருபதாயிரம் பத்தாயிரம் என கடைசியில் 500 ரூபாய் கொடுக்க முன் வந்திருக்கிறது. சரி காசே இல்லாததற்கு இது பரவாயில்லை என அந்த 500 ரூபாயும் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்களாம். பின்னாளில் இதுவே காக்கிச்சட்டை படத்தின் கதையாக அமைந்தது என ஜி எம் குமார் கூறினார்.

இதையும் படிங்க: ‘மைக் மோகன்’ பட்டம் பிடிக்கலையா? மனுஷன் சொல்ல வேண்டியதுதானே.. மோகன் சொன்னதை கேளுங்க

 

Related Articles

Next Story