உண்மையான ரசிகன்-னா இவர்தான்! எம்ஜிஆருக்காக சத்யராஜ் செய்த செயல்! இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்னு

Actor Sathyaraj : நடிகர்களை பொருத்தவரைக்கும் வில்லன் கதாபாத்திரம் என சில நடிகர்கள், நகைச்சுவைக்கு என ஒரு சில நடிகர்கள், ஹீரோக்களுக்கு என சில நடிகர்கள் என அவரவர் திறமைகளுக்கு ஏற்ப அந்தந்த ஏரியாவில் தன் திறமையை காட்டி வருவார்கள் .ஆனால் நடிகர் சத்யராஜை பொறுத்த வரைக்கும் வில்லனாகட்டும் நகைச்சுவையாகட்டும் ஹீரோ ஆகட்டும் குணச்சித்திர நடிப்பு ஆகட்டும் என எல்லா ஏரியாவிலும் சத்யராஜ் கில்லி தான்.

சத்யராஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது தகிடு தகிடு என்று அவர் பேசிய அந்த வசனம் தான் .ஆரம்பத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வந்த சத்யராஜ் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் மூலம் தான் அவர் ஹீரோவாக மக்கள் முன் பிரதிபலிக்கப்பட்டார் .கடலோரக் கவிதைகளில் தொடங்கி வால்டர் வெற்றிவேல், மிஸ்டர் பாரத், மக்கள் என் பக்கம், நண்பன் என அவரது பல கதாபாத்திரங்களை மக்கள் பெருமளவு கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படிங்க: பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலால் அதிர்ந்து போன எம்ஜிஆர்… அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

அதிலிருந்து ஆல் டைம் ஃபேவரைட் நடிகராக சத்யராஜ் வலம் வந்தார். அவருடைய சினிமா தெரியரில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது அமைதிப்படை. அமாவாசை கேரக்டரில் அரசியல்வாதி ஒருவரிடம் அடிமட்ட தொண்டனாக இணைந்து அதன் பிறகு ஒரு எம்எல்ஏவாக மாறும் பொலிடிக்கல் சட்டையர் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவு வரவேற்பை பெற்றார் .

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சத்யராஜை பொறுத்த வரைக்கும் அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என அனைவருக்குமே தெரிந்த விஷயம். எந்த ஒரு மேடை ஏறி பேசினாலும் எம்ஜிஆரை பற்றி அவர் பேசாமல் இறங்கியதே இல்லை. எம் ஜி ஆரின் வசனம் அல்லது அவர் நடித்த படத்தின் ஒரு பாடலையாவது பாடிவிட்டு தான் மேடையில் இருந்து இறங்குவார் சத்யராஜ் .

இதையும் படிங்க: பராசக்தி காலகட்டத்திலேயே சிவாஜிக்கு இருந்த அந்த வெறி… அப்படியே நடந்துடுச்சே..!

அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது அதிக பற்றுள்ள நடிகராக இருந்திருக்கிறார் சத்யராஜ். இந்த நிலையில் அவர் சமீபத்தில் எம்ஜிஆரை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். சத்யராஜை போலவே மயில் சாமியும் எம்ஜிஆர் பக்தர். லூட்டி படத்தில் சத்யராஜுடன் ஒரு காட்சியில் எம் ஜி ஆர் கேமியோ ரோலில் நடிப்பதை போல கிராபிக்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பார்கள்.

அதில் எம் ஜி ஆர் க்கு டப்பிங் பேச மயில்சாமி தலைமையில் எத்தனையோ மிமிக்ரி ஆர்டிஸ்ட்களை பேச வைத்தார்களாம். ஆனால் எதுவுமே சரியில்லையாம். அதன் பிறகு மயில்சாமி சத்யராஜிடம் நீங்கள்தான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆச்சே, நீங்களே பேசி விடுங்கள் என சொல்லி இருக்கிறார் .அதன் பிறகு அந்தப் படத்தில் எம்ஜிஆருக்காக டப்பிங் கொடுத்தது சத்யராஜ் தானாம். இதன் மூலம் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. எம்ஜிஆருக்காக டப்பிங் பேசிய முதல் ஆள் நான் தான் என சத்யராஜ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய், அஜித் படம் பண்ணுறதெல்லாம் விஷயமா? அப்புறம் எதுக்கு கதை சொல்ல போனீரு… கலாய்க்கும் ரசிகர்கள்…

 

Related Articles

Next Story