கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நயன்தாரா?.. முதன் முறையாக ஜோடியாகும் நடிகர் யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவிலேயே இவருக்கு ஒரு பெரிய அந்தஸ்தே இருக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாகவே தன் பலத்தை காட்டி வருகிறார் நயன்.
அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார், நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பு பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இப்போது குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் திருமணம் ஆனதில் இருந்தே வந்த பட வாய்ப்புகள் எல்லாமே இவரை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நயன் நடித்து வருகிறாராம். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான சசிகாந்த் தான் இயக்குகிறார்.
இவர் அறிமுகமாகும் முதல் படம் இது தான். சசிகாந்த் ஏற்கெனவே ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வா’, ‘இறுதிச்சுற்று’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்தவர் தான் சசிகாந்த். நயன் நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார்,
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ‘தி டெஸ்ட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் மூலம் நயனுக்கு ஜோடியாக முதன் முறையாக நடிகர் மாதவன் நடிக்கிறார்.கூடவே நடிகர் சித்தார்த்தும் நடிக்கிறாராம்,
இவருக்கும் இது தான் நயனுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம். ஆனால் மாதவனும் சித்தார்த்தும் ஏற்கெனவே ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஒன்றாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரு ஹிந்தி படத்திலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். மாதவனுடன் நயன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க :தியேட்டர்லயே அடி வாங்கிய சேத்தன்.. – எல்லாம் விடுதலை படம் பார்க்க போனதால் வந்த விளைவு!..