சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதை, திரைக்கதையை சுதா கொங்கரா எழுதியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
புறநானூறு என்கிற தலைப்பில் சூர்யாவை வைத்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டு அறிவிப்பெல்லாம் வெளியானது. ஆனால் சில காரணங்களால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிவிட பராசக்தி என்கிற தலைப்பில் இப்போது படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சுதா கொங்கரா.

சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் பராசக்தி ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
விஜயின் ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பராசக்தி திரைப்படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கான சென்சாருக்க சமீபத்தில் பல நாடுகளுக்கும் இப்படத்தை அனுப்பியிருக்கிறார்கள். அங்கே படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படம் மிகவும் சிறப்பாக இருப்பதோடு, கமர்சியலாகவும் இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்கள்.
ஜனநாயகன் போன்ற பக்கா கமர்சியல் படத்தோடு பராசக்தி படம் வெளியாவதால் படம் ஜெயிக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த விமர்சனங்கள் பராசக்தி பட தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினருக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
