என்னை மன்னிச்சிருங்க.. வருத்தத்துடன் கூறிய கமல்.. பெருந்தன்மையாக நடந்துகொண்ட ஹரி...

by Manikandan |
என்னை மன்னிச்சிருங்க.. வருத்தத்துடன் கூறிய கமல்.. பெருந்தன்மையாக நடந்துகொண்ட ஹரி...
X

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியான "யானை" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படத்திற்கு ஒரு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த திரைப்படம் ஜூலை 1ம் தேதி வெளியே வெளியாவதற்கு முன்பே அதற்கு முந்திய மாதமான ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தனர்.

அதனால் யானை படத்தின் ரிலீஸ் செய்தியை ஹரி தள்ளி வைக்க முடிவு செய்தார். மேலும் விக்ரம் வசூலை குவித்து வந்ததால் யானை படத்தை வெளியீட்டு அந்த படத்தின் வசூலை ஏன் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் யானை படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டர்காளம்.

இதையும் படியுங்களேன்- த்ரிஷா இருக்கும் இடத்தை கேட்டு மாட்டிக்கொண்ட கார்த்தி… காரணம் கேட்டால் திகைத்து போவீங்க…

விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க கமல்ஹாசனை சந்திக்க யானை படக்குழு சென்றிருந்தது. அப்போது கமலிடம் இயக்குனர் ஹரி விக்ரம் படத்தால் தான் எங்களுடைய யானை படம் இரண்டு வாரங்கள் தள்ளி வருகிறது. அதற்கு பதற்றமான கமல் என்னை மன்னிச்சிருங்க என வருத்தத்துடன் கேட்டுள்ளாராம்.

அதற்கு ஹரி பரவாயில்லை என்றும், இந்த வெற்றி உங்களுக்கு மட்டும் சந்தோசம் இல்லை நம்மளுடைய ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் சந்தோசம் தான். இந்த வெற்றி நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துவிட்டராம்.

Next Story