தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்து நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பன்மொழி படங்களிலும் நடித்து இந்திய அளவில் ஒரு உன்னதமான நடிகர் என்ற பெயரை பெற்றவர்.
பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சிவாஜி முதல் படத்திலேயே மக்களின் அபிமானங்களை பெற்ற நடிகராக மாறினார். நாடக மேடையில் இருந்து நடிக்க வந்த சிவாஜி சினிமா மீது பேரன்பு கொண்டவராக விளங்கினார். நடிப்பு, நடிப்பு என்றே தன் வாழ் நாள் முழுவதையும் சினிமாவிற்காகவே அர்ப்பணித்தார்.
இதையும் படிங்க: தான் மட்டும் வளர்ந்தால் போதாது! அடுத்தவனையும் வாழ வைக்கனும் – விஜயால் ஒரே நாளில் ஓஹோனு வந்த நடிகர்
இறக்கும் வரையில் ரசிகர்களை உற்சாகப்படுத்திவந்தார். இன்று சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற இளைஞர்களுக்கு சிவாஜி ஒரு பாடமாகவே கருதப்படுகிறார். அவர் நடித்த படங்கள் தான் இன்றையை இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடம்.
புராணங்கள், ஆன்மீகம், வரலாறு , குடும்ப உறவுகள் இவைகளை மையப்படுத்தி ஏராளமான படங்களில் சிறந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தவர் சிவாஜி கணேசன். சிவாஜி நடித்த ஒவ்வொரு படமும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.
இதையும் படிங்க : எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்… வீட்டை அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்… பதறிய மனைவி!
இந்த நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று திருவிளையாடல் திரைப்படம். அந்தப் படத்தில் சிவாஜி ஈஸ்வரனாக நடித்திருப்பார். அந்தப் படத்தை முன்னாள் மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் பழம்பெரும் நடிகை பானுமதி இவர்களுடன் சேர்ந்து பார்த்தாராம் சிவாஜி.
தனது வலது இடது பக்கம் இவ்ளோ பெரும் மாமேதைகளுடன் அமர்ந்து தன்னுடைய படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று எண்ணி அக மகிழ்ந்தாராம். அப்போது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ‘சிவாஜியோடு அமர்ந்து சிவ்ஜியை பார்க்கிறேன்’ என்று கமெண்ட் அடித்தாராம். அதாவது சிவாஜியை சிவன் அவதாரத்தில் பார்த்த ஒரு உணர்வை அவரது நடிப்பின் மூலம் ஏற்படுத்திவிட்டார் என்று சொன்னாராம் ராதாகிருஷ்ணன்.
இதையும் படிங்க : சேரன் பட இயக்குநரை டார் டாராக கிழித்த பயில்வான் ரங்கநாதன்!.. பதில் சொல்லமுடியாமல் வடிவேலாவே மாறிட்டாரே!..
AR Rahman…
இப்போது லைம்…
சில தினங்களுக்கு…
நடிகர் விஜய்யை…
சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக…