Connect with us
Avan than manithan

Cinema History

ஒரே பாடலில் நால்வகை சுவை… நாலு பேரும் போட்டா போட்டி… பாடல் இதுதாங்க!..

ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது இந்தப் பாடல்.

ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான அவன் தான் மனிதன் படத்தில் இந்தப் பாடல் வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படம். கவியரசர் கண்ணதாசன் எழுதி, டி.எம்.சௌந்தராஜன் பாடியுள்ளார். ஆட்டுவித்தால் யாரொருவர், ஆடாதாரே கண்ணா என்ற பாடல் தான் அது.

கண்ணதாசனின் அலுவலகத்தில் இந்தப் பாட்டுக்கான மெட்டு போட ஏற்பாடு நடக்கிறது. பல்லவிக்கான சூழலை ஏ.சி.திருலோகசந்தர் கண்ணதாசனிடம் விளக்குகிறார்.

இதையும் படிங்க… 18 நிமிடத்திற்கு முன்பே வந்து காத்திருந்த அஜித்! அதுவரை என்ன செய்தார் தெரியுமா.. வெளியான புகைப்படம்

அது கிருஷ்ண ஜெயந்தி நேரம். கிருஷ்ணர் வேடம் போட்ட குழந்தை கையில் பொம்மையுடன் சிவாஜி அருகில் வந்து அந்தப் பொம்மையை ஆட்டுகிறது. பெரியப்பா இப்ப ஒரு பாட்டுப் பாடுங்க பெரியப்பா என கேட்கிறது. இந்த சூழலுக்குப் பல்லவி போடுங்க கவிஞரே என கேட்கிறார் ஏ.சி.திருலோகசந்தர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியத்துடன் தயாராக உள்ளார். உடனே ஆடும் இந்த பொம்மை, அசையும் இந்த பொம்மை.

ஆடினாலும், அசைந்தாலும் தலைநிமிரும் பொம்மை என்று பல்லவி எழுத, இயக்குனர் நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் நல்ல வரி வேணுமே என சொல்கிறார். இதைப் புரிந்து கொண்ட கவியரசர் அவன் ஆடச்சொன்னான். நான் ஆடுகின்றேன். .இந்தப் பொம்மையைப் போல என பாட்டின் அடுத்த வரிகளைப் போடுகிறார். அடுத்து இயக்குனர் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன் என்று சொல்ல,

இதைப் புரிந்து கொண்டார் கண்ணதாசன். இப்போது பொம்மையை விட்டு விட்டு ஆட்டுவித்தால் யாரொடுவர் ஆடாதாரே, அவன் செயலை அனுபவித்துக் காணாதாரேன்னு போட்டாராம். அப்போது மெல்லிசை மன்னர் அண்ணே உங்க முத்திரை இன்னும் விழலை அண்ணே… இன்னும் நச்சுன்னு விழுகற மாதிரி பண்ணுங்கண்ணேன்னு சொல்லி இந்தாங்கண்ணே டியூனுன்னு ஆர்மோனியத்தில் போடுகிறார்.

அப்போது கவியரசருக்கு பொறி தட்டுகிறது. திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பார்த்து ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே, அடங்குவித்தால் யாரொருவர் அடங்காதாரே… பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே, பணிவித்தால் யாரொருவர் பணியாதாரேன்னு அழகாக எழுதியிருப்பார்.

அதில் வரும் ரே ரே என்பதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணான்னு பல்லவியைப் போடுகிறார். இந்தப் பாடலில் அவரது அனுபவத்தையும் இப்படி எழுதியிருப்பார். நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு. நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலேன்னு அழகாக சொல்லியிருப்பார். இதுதான் படத்தோட மொத்த மையக்கருத்து.

Avan than manithan

Avan than manithan

முதலில் இந்தப் பாடலில் சந்தூர் பெல் வரும். அது கம்பீரம். அடுத்து இந்தியன் கிட்டார் இசை தன்னிரக்கத்தைக் கொண்டு வரும். அடுத்து வரும் சோகத்தைப் புல்லாங்குழல் சொல்லும். முதலில் டிஎம்எஸ் இந்தப் பாடலில் ஆட்டுவித்தால் என தன் குரலில் கம்பீரத்தைக் கொண்டு வருவார். அடுத்து நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என சொல்லும்போது லேசாகக் குழைவார். அடுத்து என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு என பாடும்போது தழுதழுத்து விடுவார்.

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே எனப் பாடும் போது சின்ன கம்பீரம் வரும். அழுகிற மன நிலையில் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே என அவர் அழகாக தன் பணியை முடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜியும் தன் முகபாவத்தில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், அழுகை என அழகாகக் கொண்டு வந்து இருப்பார்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top