தலைவர மட்டும் நம்பி வீணா போயிடாத!...டான் இயக்குனரை எச்சரிக்கும் நண்பர் வட்டாரம்....
சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கியவர் இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி. இது இவரின் முதல் திரைப்படம். முதல் திரைப்படமே ஹிட் அடித்தது. அதோடு, அப்படத்தை பார்த்த ரஜினியும் சிபி சக்ரவர்த்தியை பாராட்டிய சம்பவமும் நடந்தது.
ஒரு இயக்குனர் மெகா ஹிட் கொடுத்தால், அந்த இயக்குனரை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் பண்ண சொல்வது ரஜினியின் வழக்கம். இளம் இயக்குனர்களோடு கூட்டணி அமைத்தால் ஃபிரெஷ்ஷான ஒரு கதையோடு வருவார்கள், தீயாக வேலை செய்வார்கள், நாமும் இளைஞர்களை கவர முடியும் என்பதுதான் ரஜினியின் கணக்கு.
இதையும் படிங்க: ஷூட்டிங் போகாமல் வீட்டில் தூங்கிய விஷால்…கடுப்பாகி தயாரிப்பாளர் செய்த வேலை…
சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப்போக, ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு வருகிறேன் காத்திருங்கள் எனக்கூறிவிட்டு ரஜினி படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். எனவே, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது சிபி சக்ரவர்த்திதான் என செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த முறை சும்மா இருக்க மாட்டேன்…! தொடர் சர்ச்சைகளினால் கடுப்பான சமந்தா…
ஆனால், ரஜினியை மட்டும் நம்பி டைம் வேஸ்ட் பண்ணாத, திடீர்னு வேறு ஒரு இயக்குனர் பக்கம் அவர் போய்விடுவார். எனவே, மற்ற ஹீரோக்களுக்காகவும் கதைகளை உருவாக்கி முயற்சி செய் என அவரின் நெருங்கிய வட்டாரம் அறிவுரை செய்துள்ளனராம்.
பேட்ட படத்திற்கு பின் 'தர்பார்' தோல்வி அடைந்த போது, மீண்டும் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பாராஜ் படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதேபோல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரஜினிக்கு பிடித்துப்போக அப்பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து தனக்காகஒரு கதையை அவரிடம் தயார் பண்ண சொன்னார் ரஜினி. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. இருவருமே ரஜினிக்காக பல மாதங்கள் காத்திருந்தனர்.
அதன் பின்னர்தான் கார்த்திக் சுப்பாராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்க போனார். ஆனால், தேசிக்கு பெரியசாமிக்கு அதன்பின் படம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.