சந்திரபாபுவால் உச்சகட்ட கோவத்திற்கு சென்ற எம்.ஜி.ஆர்... பின்னனியில் இருந்த ஜெயலலிதா!...

by Sankar |
sb
X

sb

நகைச்சுவை நடிகர்களில் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் சந்திரபாபு. சிரிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் சிந்திக்க வைத்த சிரிப்பு கலைஞர்களும் உண்டு. அப்பேற்பட்டவர்களில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் சந்திரபாபு அந்த காலத்தில். நடிப்பில் மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் வல்லவராக இருந்தவர் இவர். இவர் நடித்த "அன்னை" திரைப்படத்தில் இடம் பெற்ற 'புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை' இந்த பாடல் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலம் வந்தது.

snb

snb

திரைப்படங்களில் நடிப்பதற்காகவே பரத நாட்டியம் கற்றுக்கொண்டவர். சுதந்திர போராட்டத்திற்கும் இவரது குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவரது தந்தையார் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த போதிலும், இவர் நடிப்பிற்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

"குலேபகாவலி" படத்தின் மூலம் எம்.ஜி.ஆரால் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் தனது திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவராக திகழ்ந்தார். நல்ல, நல்ல வாய்ப்புகள் இவரைத்தேடி வர அவற்றை எல்லாம் சரியாக பயன்படுத்தி தனது திரை வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றார். இவர் நடித்த படங்களில் இவருக்கான கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தும் வந்தது.

எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு பாராட்டி வந்தவர் சந்திரபாபு. இப்படி இருக்கையில் ஜெயலலிதாவுடனான இவரது பழக்கம் எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வர வரவழைத்ததாம். சந்திரபபு மீது பாசம் கொண்டவராக இருந்துவந்தாரம் ஜெயலலிதா. சந்திக்கும் இடங்களில் எல்லாம் சந்திரபாபுவை அழைத்து பேசும் அளவிற்கு அவர் மீது உரிமை எடுத்தும் வந்தாராம். ஜெயலலிதாவின் சொல்லிற்கு கட்டுப்பட்டவராகவும் இருந்தாராம் சந்திரபாபு.

இப்படி இவர்கள் இருந்து வர இந்த விஷயம் எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு சென்றதாம். சந்திரபாபுவை எம்.ஜி.ஆர் அழைத்து பேசியிருக்கிறார். அப்போது சந்திரபாபு ‘அவராக அழைத்து பேசும் பொழுது நான் எப்படித்தவிர்ப்பது?’ என சொல்லி இருக்கிறார். மேலும், எம்.ஜி.ஆர் உடனான நட்பு கெடாதவாறு பார்த்து கொண்டும் வந்தாராம் சந்திரபாபு. எம்.ஜி.ஆர் மீது அளவுக்கு அதிகமான அன்பும், பாசமும் , பக்தியும் கொண்டிருந்தவராகவும் இருந்தாராம் சந்திர பாபு. இந்த தகவல்களை சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Next Story